அரசியலமைப்பின் வளர்ச்சி (1858 - 1947)
1744 ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச்சட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்து இந்திய அரசியலமைப்பின் வரலாறு தொடங்குகிறது. 1784 ஆம் ஆண்டு பிட் இந்தியச் சட்டம் மற்றும் 1793 முதல் 1853 வரை இயற்றப்பட்ட பட்டயச் சட்டங்கள் கிழக்கிந்திய வணிகக்குழுவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாகும். 1858 ஆம் ஆண்டு கலகம் இந்தியாவில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஆட்சி, இங்கிலாந்து அரசரின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. விக்டோரியா அரசியின் அறிக்கை இந்தியர்களுக்கு நல்லாட்சி வழங்கப்படும் என்ற உறுதியினையும் அளித்தது. அதன்பிறகு நடைபெற்ற இந்திய தேசிய இயக்கத்தின் பின்னனியில் இந்திய அரசியலமைப்பில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்
1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. 1858 ஆகஸ்டு 2 ஆம் நாள் அரச அனுமதியையும் இச்சட்டம் பெற்றது. இச்சட்டத்தின் முக்கிய பிரிவுகள்
- கிழக்கிந்திய வணிகக்குழுவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியாவின் ஆட்சி அரசியின் நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது.
- இங்கிலாந்தில், இயக்குநர்கள் குழுவும், கட்டுப்பாட்டு வாரியமும் கலைக்கப்பட்டன. அவற்றுக்குப்பதில் இந்தியாவுக்கான அயலுறவுச் செயலர் ஒருவர் நியமிக்கப்பட்டார் அவருக்கு ஆலோசனை வழங்க 'இந்தியா கவுன்சில்' என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. அயலுறவுச் செயலர் பிரிட்டிஷ் அமைச்சரவையில் உறுப்பினராக இருப்பார். இந்தியாவுக்கான முதல் அயலுறவுச் செயலராக சர் சார்லஸ் வுட் நியமிக்கப்பட்டார். இந்தியா கவுன்சிலில் 15 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.
- இந்தியாவின் தலைமை ஆளுநர் இந்தியாவின் வைஸ்ராய் (அரசுப் பிரதிநிதி) என்ற பொறுப்பையும் வகிப்பார். இந்தியாவின் முதல் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டவர் கானிங் பிரபு ஆவார்.
- இச்சட்டம் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசியலமைப்பின் வளர்ச்சி (1858 - 1947) , இந்திய, வரலாறு, இந்தியாவின், ஆண்டு, அரசியலமைப்பின், இந்தியா, வளர்ச்சி, அயலுறவுச், அரசு, ஆட்சி, கொண்டு, முக்கிய, இச்சட்டம், நியமிக்கப்பட்டார், அரசியின், செயலர், இந்தியாவுக்கான, பிரிட்டிஷ், கிழக்கிந்திய, சட்டம், வணிகக்குழுவின், நடைபெற்ற, வரப்பட்டது, இங்கிலாந்து, மாற்றங்கள்