ஆங்கிலேயரின் சீர்திருத்தங்கள்
மொழி மற்றும் கல்விக் கொள்கை
ஆரம்ப காலத்தில் கிழக்கிந்திய வணிகக்குழு கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. 1757ல் ஆங்கிலேயர் வங்காளத்தைக் கைப்பற்றியபோதும், கல்வியைப் புகட்டும் பொறுப்பு இந்தியர்களிடமே இருந்தது. அரபி, பாரசீகம், வடமொழி ஆகியவற்றில் எழுதப்பட்ட நூல்களே கற்பிக்கப்பட்டு வந்தன. 1781ல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கல்கத்தாவில் ஒரு மதரஸாவை நிறுவி அங்கு அரபி, பாரசீக மொழிகள் உட்பட முஸ்லீம் சட்டங்கள் கற்பிக்கப்படுவதை ஊக்குவித்தார்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு 1791ல் பிரிட்டிஷ் தூதுவரான ஜோனாதன் டங்கன் என்பவரது சீரிய முயற்சியால் காசியில் ஒரு வடமொழிக் கல்லூரி நிறுவப்பட்டது. இங்கு, இந்துச் சட்டங்கள் மற்றும் தத்துவம் போன்றவை கற்பிக்கப்பட்டன. இதனால், 19ஆம் நூற்றாண்டின் முதல் மூன்று பத்தாண்டுகளில் பாரம்பரிய கல்வி முறைகளும் கல்விக்கூடங்களுமே கல்வியைப் பரப்பி வந்தன என்பது தெளிவாகும்.
வங்காளத்தில் மட்டும் ஏறத்தாழ 80,000 பாரம்பரிய கல்விக்கூடங்கள் செயல்பட்டு வந்ததாக அரசாங்க மற்றும் திருச்சபை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன, அதாவது அந்த மாகாணத்தில் மட்டும் குறைந்தபட்சம் 400 பேருக்கு ஒரு கல்விச்சாலை என்ற விகிதத்தில் செயல்பட்டன. இதுவே கீழ்த்திசை கல்விமுறையின் சிறப்பாகும். சென்னை, பம்பாய், பஞ்சாப் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் இத்தகைய கல்வி நிலை இருந்ததையே உறுதிப்படுத்துகிறது. அன்றைய இந்தியாவில் கிராமந்தோறும் பள்ளிகள் இருந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆங்கிலேயரின் சீர்திருத்தங்கள் , வரலாறு, இந்திய, கல்வி, சீர்திருத்தங்கள், ஆங்கிலேயரின், மட்டும், பாரம்பரிய, சட்டங்கள், அரபி, இந்தியா, கல்வியைப், வந்தன