ஆங்கிலேயரின் சீர்திருத்தங்கள்
பிரிட்டிஷார் தங்களது ஆட்சியை இந்தியாவில் நிறுவிய காலக்கட்டத்தில் பெண்களின் நிலைமை திருப்திகரமாக இல்லை. சதி என்ற உடன்கட்டையேறும் வழக்கம், பர்தா அணியும் முறை, குழந்தைத் திருமணம், பெண் சிசுக்கொலை, வரதட்சணை, பலதாரமணம் போன்ற சமூகக் கொடுமைகள் பெண்களின் வாழ்க்கையை சீரழித்தன. பெண் என்பவள் நான்கு சுவற்றுக்குள் அடைத்து வைக்கப்பட்டாள். கல்விக் கதவுகள் அவளுக்கு திறக்கப்படவில்லை. பொருளாதார ரீதியாகக்ககூட அவளது நிலை பரிதாபமாகவே காணப்பட்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமூக, பொருளாதார சமத்துவம் காணப்படவில்லை. ஒரு இந்துப்பெண் சொத்துக்கு வாரிசாக வழியில்லை. மொத்தத்தில் அவள் ஆண்களை நம்பியே வாழவேண்டியிருந்தது.
சமூக சீர்திருத்தவாதிகள், மனித நேயமிக்கவர்கள், சில பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆகியோரின் தீவிர முயற்சிகளால், இந்திய சமுதாயத்தில் பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்காக 19 மற்றும் 20 ஆம் நூற்றண்டுகளில் சில சட்டங்கள் இயற்றப்பட்டன. இவற்றில் முதலாவதாக வில்லியம் பெண்டிங் பிரபு ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட சதிமுறை ஒழிப்பு சட்டத்தைக் கூறலாம்.
பெண்சிசுக் கொலை
19ஆம் நூற்றாண்டின் பின் இந்திய சமுதாயத்தை உலுக்கிய பிரச்சனை மனிதாபிமான மற்ற கொடும் செயலான பெண்சிசுக் கொலையாகும். ராஜபுதனம், பஞ்சாப், வடமேற்கு மாகாணங்களில் இது பரவலாக காணப்பட்டது. கர்னல் டாட், ஜான்சன் டன்கன், மால்கம் போன்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெண் சிசுக்கொலை குறித்து விளக்கமாக ஆய்வு செய்தனர். குடும்பப் பெருமை, பெண்ணுக்கு ஏற்ற வரன் கிடைக்காதது என்ற அச்சம், வரப்போகும் மாமியாரிடம் பணிந்து போவதற்கு தயக்கம் போன்ற காரணங்களால் பெண் சிசுக்களை கொல்லும் வழக்கம் நிலவியதாக இவர்கள் கருதினர். பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே, அபினியை விழுங்கச் செய்தல், கழுத்தை நெரித்தல், வேண்டுமென்றே ஒதுக்குதல் போன்ற வழிமுறைகளைக் கையாண்டு அவற்றை கொன்றனர். 1795, 1802, 1804 பின்னர் 1870 ஆகிய ஆண்டுகளில் இந்த வழக்கத்தை தடை செய்து சில சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனால், இந்த கொடிய சமூகத்தீங்கை சட்டங்களால் மட்டுமே முழுதும் ஒழிக்க முடியவில்லை. கல்வி மற்றும் பொதுக் கருத்தை உருவாக்குதல் போன்ற நடைமுறைகள் வாயிலாகவே படிப்படியாக இவ்வழக்கம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆங்கிலேயரின் சீர்திருத்தங்கள் , வரலாறு, இந்திய, பெண், பெண்களின், ஆங்கிலேயரின், சட்டங்கள், சமூக, சீர்திருத்தங்கள், ஆட்சியாளர்கள், இயற்றப்பட்டன, பிரிட்டிஷ், பெண்சிசுக், வழக்கம், இந்தியா, சிசுக்கொலை, பொருளாதார, காணப்பட்டது