1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா
பிரிட்டிஷ் இந்திய ஆட்சியாளர்களில் வெல்லெஸ்லி பிரபு, டல்ஹவுசி பிரபு ஆகியோரின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் கர்சன் பிரபு ஆவார். அவர் ஒரு முழுமையான பேரரசுக் கொள்கையாளர் ஆட்சியை திறமையாக நடத்தும் நோக்கத்துடன் கர்சன் பிரபு ஆட்சியமைப்பை நன்கு சீரமைத்தார். அவரது உள்நாட்டு நிர்வாகத்தை பின்வரும் தலைப்புகளில் பார்க்கலாம்.
கல்வி சீர்திருத்தங்கள்
கர்சன் பிரபு |
காவல்துறை, ராணுவ சீர்திருத்தங்கள்
திறமையிலும் கட்டுப்பாட்டிலும் கர்சன் நம்பிக்கையுடையவர். 1902ல் சர் ஆண்ட்ரூ பிரேசர் தலைமையில் காவல்துறைக் குழு ஒன்றை அவர் நியமித்தார். அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப்படுத்தினார். அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் பயிற்சிப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. மாகாண காவல் பணித்துறை அறிமுகப்படுத்தப்பட்டது. ராணுவத்தை சீரமைப்பதற்கு இந்தியாவில் படைத்தளபதியாக இருந்த கிச்சனர் பிரபுவின் கையில் விடப்பட்டது.
கல்கத்தா மாநகராட்சி சட்டம் (1899)
1899 ஆம் ஆண்டு கர்சன் கல்கத்தா மாநகராட்சி சட்டத்தைக் கொண்டு வந்தார். இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அதிகாரிகள் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மேலும், கல்கத்தா மாநகராட்சியில் இந்தியர்களைவிட, ஆங்கிலேயருக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. கர்சனது இந்த மக்கள் விரோத நடவடிக்கை இந்திய உறுப்பினர்களிடையே மனக்கசப்பை உண்டாக்கியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா , கர்சன், இந்திய, பிரபு, வரலாறு, இந்தியா, பிரிட்டிஷ், ஆண்டுக்குப்பின், கல்கத்தா, அவர், ஆண்டு, ஏற்று, கொண்டு, எண்ணிக்கை, பரிந்துரைகளை, மாநகராட்சி, சீர்திருத்தங்கள், கல்வி, இந்தியாவின், பல்கலைக்கழகங்கள், 1902ல், நியமித்தார், அக்குழுவின்