1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா
இந்தியாவில் இருவேறு வகையான சட்டத்தை நீக்குவதற்கு ரிப்பன் முயற்சி எடுத்தார். இந்தியாவிலிருந்த சட்ட அமைப்பின்படி ஒரு ஐரோப்பியர் குறித்த வழக்கை ஐரோப்பிய நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும். இந்திய நீதிபதி விசாரிக்க முடியாது. நீதிமன்றங்களில் பதவியிலிருந்த இந்திய நீதிபதிகளுக்கு இந்த சட்டப்பாகுபாடு பெருத்த அவமானத்தை அளிப்பதாக இருந்தது. சட்ட உறுப்பினரான சி.பி. இல்பர்ட் 1883ல் நீதித்துறையில் காணப்பட்ட இந்த பாகுபாட்டைப் போக்குவதற்காக ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால், ஐரோப்பியர்கள் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். இம்மசோதாவை எதிர்த்துப் போராட பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைத்த அவர்கள் போராட்ட நிதியாக ஒன்றரை லட்ச ரூபாயையும் திரட்டினர். ஆங்கிலேயரை இந்திய நீதிபதிகளின் விசாரணைக்கு உட்படுத்துவதைவிட, இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்கொண்டு வருவதே மேல் என்று அவர்கள் கூறினர். இங்கிலாந்து பத்திரிக்கைகளும் அவர்களுக்கு ஆதரவு அளித்தன. எனவே இங்கிலாந்திலும் இந்தியாவிலும் இருந்த ஆங்கிலேயரை திருப்திப்படுத்துவதற்காக ரிப்பன் இம்மசோதாவில் திருத்தம் கொண்டு வந்தார்.
இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை இந்திய தேசியம் வளருவதற்கு பெரிதும் உதவியது. இந்திய தேசிய இயக்கத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்த சர்ச்சையால் பெரிதும் மனமுடைந்த ரிப்பன் தனது பதவியைத் துறந்துவிட்டு இங்கிலாந்து திரும்பினார். இந்த நிகழ்வின் உடனடி விளைவாக, 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
ரிப்பன் பிரபு பற்றிய மதிப்பீடு
இந்தியாவிற்கு இங்கிலாந்து அனுப்பிவைத்த வைஸ்ராக்களிலேயே மிகவும் புகழ்மிக்கவர் ரிப்பன் பிரபு ஆவார். இந்தியர்களின் பிரச்சினைகளை கனிவுடனும், பரிவுடனும் கையாண்ட காரணத்தால் அவரை 'ரிப்பன் தி குட்' (ரிப்பன் எங்கள் அன்பன்) என்று இந்திய மக்கள் போற்றிப் புகழ்ந்தனர். நீதித்துறையில் நிலவிய இனப்பாகுபாட்டை ஒழிக்க முயற்சியெடுத்தது, நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை திரும்பப் பெற்றது, தல சுய ஆட்சியை அறிமுகப்படுத்தியது, மைசூரைத் திரும்பி வழங்கியது போன்ற நடவடிக்கைகள் இந்தியர்களிடையே அவரது புகழை மேலும் உயர்த்தியது. அவரது செயல்பாடுகளை நன்றியுடன் போற்றிய இந்தியர்கள் ரிப்பன் பதவி விலகியதற்காக மிகவும் வருத்தப்பட்டனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா , இந்திய, ரிப்பன், வரலாறு, இந்தியா, இங்கிலாந்து, குறித்த, இல்பர்ட், பிரிட்டிஷ், ஆண்டுக்குப்பின், ஆட்சியை, ஆங்கிலேயரை, இம்மசோதாவை, மிகவும், அவரது, வந்தார், பிரபு, தேசிய, சட்ட, இந்தியாவில், சர்ச்சை, மசோதா, சட்டத்தை, நீதிபதி, நீதித்துறையில், விசாரிக்க, கொண்டு