1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா
வில்லியம் பெண்டிங் பிரபுவைப் போலவே, ரிப்பன் பிரபுவும் இந்தியர்களின் கல்விக்காக பாடுபட்டார். உட்ஸ் அறிக்கையின் அடிப்படையில் இந்தியக் கல்விமுறையின் செயல்பாட்டை ஆய்வு செய்ய ரிப்பன் முடிவு செய்தார். கல்வியமைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக 1882ல் சர் வில்லியம் ஹண்டர் தலைமையிலான குழு ஒன்றை நியமித்தார். இதுவே ஹண்டர் கல்விக்குழு என்று அழைக்கப்படுகிறது. மக்களின் தொடக்கக் கல்வியை மேம்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் என இக்குழு பரிந்துரைத்தது. இடைநிலைக் கல்வி இரண்டு கோணங்களில் மேம்படுத்தப்படவேண்டும் என்று இக்குழு கூறியது. அவை பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு இட்டுச் செல்லக்கூடிய இலக்கியக் கல்வி மற்றும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு வழிவகுக்கும் தொழிற்கல்வியாகும்.
பெண் கல்வியின் பிற்போக்கு நிலை குறித்தும் இக்குழு குறிப்பிட்டது. தொடக்கக் கல்வியை கிராமங்களிலும், நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிப்பதை இக்குழு ஊக்குவித்தது. இந்தப் பரிந்துரைகளால், இந்தியாவில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது.
முதல் தொழிற்சாலை சட்டம் (1881)
இந்தியாவின் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் பணிநிலைமைகளை மேம்படுத்துவதற்காக ரிப்பன் பிரபு 1881 ஆம் ஆண்டு தொழிற்சாலைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். ஏழு வயதுக்கு குறைவான குழந்தைகளை தொழிற்சாலைகளில் வேலைக்கு நியமிப்பதை இச்சட்டம் தடைசெய்தது. குழந்தைகளின் வேலை நேரத்தையும் இது குறைத்தது. தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அபாயகரமான இயந்திரங்களைச் சுற்றி கட்டாயமாக வேலியமைக்க வேண்டும் என்று இச்சட்டம் கூறியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா , வரலாறு, இந்தியா, இக்குழு, கல்வி, இந்திய, ஆண்டுக்குப்பின், பிரிட்டிஷ், ரிப்பன், இச்சட்டம், கூறியது, வேலை, வேண்டும், தொழிலாளர்களின், மேம்படுத்துவதற்காக, இந்தியாவின், வில்லியம், ஹண்டர், தொடக்கக், கல்வியை