1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா
லிட்டனது ஆப்கானியக் கொள்கை மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. காபூலில் பிரிட்டிஷ் தூதரும் அதிகாரிகளும் கொல்லப்பட்டதற்கு அவரே பொறுப்பு என்றும் கருதப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பஞ்சத்தினால் மடிந்தனர். அவர் கொண்டு வந்த நாட்டு மொழி செய்தித் தாள் சட்டம் லிட்டனுக்கு தீராத அவப்பெயரைத் தேடிக் கொடுத்தது.
ரிப்பன் பிரபு |
தல சுய ஆட்சியில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ரிப்பன் பிரபு ஒரு தாராள மக்களாட்சி வாதியாவார். இங்கிலாந்தின் லிபரல் கட்சி பிரதமரான கிளாட்ஸ்டன் என்பவரால் ரிப்பன் இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். லிட்டன் பின்பற்றிய ஆப்கானிய கொள்கையை திரும்பப் பெறும்படி ரிப்பனுக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே அவர் இந்தியாவுக்கு வந்தவுடனேயே பிரிட்டிஷ் கவுரவத்துக்கு எந்த இழப்பும் ஏற்படாத வகையில் ஆப்கானிஸ்தானத்துடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார். காபூலில் பிரிட்டிஷ் தூதரை நியமிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது. மைசூரில் ஒரு இந்து அரசரை மீண்டும் நியமித்தது ரிப்பனின் மற்றொரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். மேலும் ரிப்பன் நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை ரத்துசெய்து இந்திய மக்களிடையே பெரும்புகழ் பெற்றார். பின்னர் இந்திய ஆட்சியமைப்பை தாரளமயமாக்குவதில் ரிப்பன் தமது கவனத்தை செலுத்தினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா , பிரிட்டிஷ், ரிப்பன், வரலாறு, இந்திய, இந்தியா, ஆப்கானிய, ஆண்டுக்குப்பின், பிரபு, அவர், நாட்டு, காபூலில், மொழி, செய்து, படைகள், இந்தியாவின், அவரது, மீண்டும், லிட்டன், வந்த