காரன் வாலிஸ் பிரபு
நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கு காவல்துறையின் சீரமைப்பும் தேவையாக இருந்தது. மாவட்ட நீதிபதியின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்தது. ஒவ்வொரு மாவட்டமும் சுமார் 20 மைல் பரப்பளவு கொண்ட 'தாணா' (காவல் சரகம்) என்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு 'தாணா' பிரிவும் 'தரோகா' எனப்பட்ட இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டன. அவருக்கு உதவியாக பல காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் காவல் துறை திறமையானதாக இல்லை. மார்ஷ்மேன் என்பவரது கூற்றுப்படி தரோகா வரம்பற்ற அதிகாரத்தைப் பெற்றிருந்ததோடு நாட்டில் நிலவிய கொடுமைகளுக்கும் காரணமாக இருந்தார்.
பிற சீர்திருத்தங்கள்
வணிகக் குழுவின் வாணிப முதலீடுகளை நிர்வகித்து வந்த வணிக வாரியத்தை காரன்வாலிஸ் சீரமைத்தார். சார்லஸ் கிராண்ட் என்பவரின் உதவியோடு அதில் நிலவிய எண்ணற்ற முறைகேடுகளையும் ஊழல் நடவடிக்கைகளையும் அவர் ஒழித்தார். இந்திய தொழிலாளர்களுக்கும் நெசவாளிகளுக்கும் நியாயமான சலுகைகளை வழங்கினார். நேர்மையான பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தினார்.
காரன்வாலிஸ் குறித்த மதிப்பீடு
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த காரன்வாலிஸ் நாட்டுப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார். தனது கடமைகளை அச்சமின்றி நிறைவேற்றினார். கடமையும் தியாகமும் அவரது மூச்சாக விளங்கியது. திப்புவின் வளர்ச்சி அஞ்சும் நிலைக்கு சென்றபோது, தலையிடாக் கொள்கையை கைவிட்டு துணிச்சலுடன் அதனை எதிர்கொண்டார். ஒரு ஆட்சியாளராக வணிகக்குழுவின் ஆட்சியை இந்தியாவில் நிலைப்படுத்தினார்.
தூய்மையான திறமையான நிர்வாகத்திற்கு அடித்தளம் வகுத்தார். அவர் கொண்டுவந்த நிலையான நிலவரித் திட்டத்தில் குறைகள் இருந்தபோதிலும், ஆட்சித் துறை, நீதித்துறை சீர்திருத்தங்களில் தமது முத்திரையை காரன் லாலிஸ் பதித்துவிட்டுச் சென்றார். தற்கால இந்திய ஆட்சிப் பணியின் தந்தை என்று அவரைக் கருதலாம்.
காரன்வாலிசை தொடர்ந்து சர் ஜான் ஷோர் (1793 - 98) தலைமை ஆளுநராக பதவி வகித்தார். இவரது ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஏதும் இல்லை எனலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காரன் வாலிஸ் பிரபு , இந்திய, வரலாறு, காரன், காரன்வாலிஸ், பிரபு, சீர்திருத்தங்கள், வாலிஸ், துறை, இல்லை, அவர், தரோகா, நிலவிய, கட்டுப்பாட்டில், இந்தியா, காவல்துறை, ஒவ்வொரு, தாணா, காவல்