காரன் வாலிஸ் பிரபு
2. கல்கத்தா, டாக்கா, மூர்ஷிதாபாத், பாட்னா ஆகிய நகரங்களில் நான்கு மாகாண மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் இருந்தன. இவை ஒவ்வொன்றிலும் மூன்று ஐரோப்பிய நீதிபதிகள் இந்திய ஆலோசனையாளர்களின் உதவியுடன் செயல்பட்டனர்.
3. மாவட்டந்தோறும் ஒரு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட மற்றும் நகர நீதிமன்றங்கள் ஓவ்வொன்றும் ஒரு ஐரோப்பிய நீதிபதியின் கட்டுப்பாட்டில் இயங்கியது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, மாவட்ட ஆட்சியர்கள் நீதித்துறை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். எனவே, புதிதாக மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
4. நீதித் துறையின் கீழ்மட்டத்தில் இருந்த அனைத்து நீதிமன்றங்களிலும் இந்திய நீதிபதிகள் அல்லது முன்சீப்கள் நியமிக்கப்பட்டனர்.
குற்றவியல் வழக்குகளைப் பொறுத்தவரை இஸ்லாமிய சட்டம் மேம்படுத்தப்பட்டு பின்பற்றப்பட்டது. உரிமையியல் வழக்குகளில் வழக்கு தொர்புடையவர்கள் சமயத்தின் அடிப்படையில் இந்து மற்றும் இஸ்லாமிய சட்டங்கள் பின்பற்றப்பட்டன. இந்து, முஸ்லீம் ஆகியோருக்கிடையிலான வழக்குகளில் நீதிபதியின் முடிவே இறுதியானது. கருணை உள்ளம் கொண்ட காரன்வாலிஸ், காட்டுமிராண்டித்தனமான தண்டனைகளை வெறுத்தார். உறுப்புக்களை சிதைத்தல், துன்புறுத்தி விசாரித்தல் போன்ற நடைமுறைகளை அவர் ஒழித்தார்.
காரன்வாலிஸ் ஆட்சித்துறையைவிட சட்டவியலில் அதிக அக்கறை செலுத்தினார். தனது சக பணியாளரான ஐ£ர்ஜ் பார்லோ என்பவரின் உதவியுடன் ஒரு முழுமையான சட்டத்தொகுப்பை காரன்வாலிஸ் உருவாக்கினார். ஆட்சித்துறையின் பிரிவுகளான, நீதி, காவல், வாணிகம், செலவினங்கள் போன்ற அனைத்து நடைமுறைகளையும் இது உள்ளடக்கியிருந்தது. 18ம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் புகழ்பெற்றிருந்த மான்டெஸ்கியூ என்பவரின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை (இச்சட்டத் தொகுப்பு) அடிப்படையாகக் கொண்டு விளங்கியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காரன் வாலிஸ் பிரபு , இந்திய, வரலாறு, மாவட்ட, நீதிபதிகள், காரன்வாலிஸ், பிரபு, வாலிஸ், காரன், நியமிக்கப்பட்டனர், நீதிபதியின், இந்து, என்பவரின், வழக்குகளில், இஸ்லாமிய, அனைத்து, நீதிமன்றங்கள், துறையின், நீதித், இந்தியா, சதர், நீதிமன்றமும், ஐரோப்பிய, குற்றவியல், உதவியுடன்