காரன் வாலிஸ் பிரபு
1 பல்வேறு உள்நாட்டு சீர்திருத்தங்களை மேற்கொண்டு திப்பு தனது வலிமையை பெருக்கிக் கொண்டார். இதனால் பிரிட்டிஷாரும் ஹைதராபாத் நிசாம் மற்றும் மராட்டியரும் கவலை கொண்டனர்.
2 மேலும், பிரான்சு, துருக்கி போன்ற நாடுகளுக்கு தூதுவர்களை அனுப்பிய திப்பு ஆங்கிலேயருக்கெதிராக அவர்களது உதவியைக் கோரினார்.
3 பிரிட்டிஷாரின் கூட்டாளியான திருவாங்கூர் அரசர் போன்றவர்களிடமிருந்து நிலப்பகுதிகளைக் கைப்பற்றி திப்பு தமது அரசின் பரப்பை விரிவு படுத்தினார்.
4. 1789ல் திப்புவுக்கு எதிராக, ஹைதராபாத் நிசாம் மற்றும் மராட்டியருடன் சேர்ந்து ஒரு முக்கூட்டிணைவை பிரிட்டிஷார் ஏற்படுத்தினர்.
திப்பு சுல்தான் |
1 திப்பு தனது ஆட்சிப் பகுதியில் பாதியை பிரிட்டிஷாருக்கு விட்டுக் கொடுத்தார்.
2. போர் இழப்பீடாக திப்பு மூன்று கோடி ரூபாய் கொடுப்பது என்றும் அதுவரை தனது இருபுதல்வர்களை பிணையாக ஆங்கிலேயரிடம் விட்டுவைப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
3. இருதரப்பினரும் போர்க்கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டனர்.
தென்னிந்திய வரலாற்றில் ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். மலபார் கடற்கரையில் பிரிட்டிஷார் ஒரு பரந்த நிலப்பரப்பை இதன்மூலம் பெற்றனர். மேலும், பாரமகால் மாவட்டத்தையும் திண்டுக்கல் பகுதியையும் பிரிட்டிஷார் பெற்றனர். இந்த போருக்குப்பின் மைசூரின் புகழ் மங்கியது என்றாலும் முற்றிலும் அழிந்துவிடவில்லை எனலாம். திப்பு தோற்கடிக்கப்பட்டாரே தவிர, முற்றிலும் அழிக்கப்படவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காரன் வாலிஸ் பிரபு , திப்பு, வரலாறு, இந்திய, காரன்வாலிஸ், தனது, காரன், பிரிட்டிஷார், போர், வாலிஸ், திப்புவின், பிரபு, 1790ல், மூன்று, என்றும், முற்றிலும், பெற்றனர், ஒப்புக், ஸ்ரீரங்கப்பட்டணம், மேலும், முக்கிய, மைசூர், மூன்றாம், இந்தியா, ஹைதராபாத், நிசாம், தமது, அனுப்பிய, கொண்டனர், திப்புவுக்கு