ஆங்கிலேய நிர்வாகங்கள் மற்றும் சீர்திருத்தங்கள்
இரண்டாவதாக, இந்தியாவில் பிரிட்டிஷாரின் அரசியல் செல்வாக்கு அதிகரித்த பிறகு, இந்திய ஆட்சியாளர்கள் வீழ்ச்சியடையத் தொடங்கினார்கள். இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த அரச உடைகள், ஆயுதங்கள், கலைப் பொருட்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கான தேவைகளும் குறையத் தொடங்கின.
மூன்றாவதாக பரம்பரை அரச வம்சங்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்தனர். அவர்கள் பயன்படுத்திவந்த பரம்பரை ஆடம்பரப் பொருட்களின் தேவையும் பெருமளவு குறைந்தன.
நான்காவதாக, தொழிற்புரட்சியின்போது ஐரோப்பாவில் புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கைத்தறிகளுக்குப் பதில் விசைத்தறிகள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவிலும் இயந்திரங்கள் சிறிது சிறிதாக கொண்டுவரப்பட்டதால் கைத்தொழில் நசிந்தது. இயந்திரத்தைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மலிவான விலையில் கிடைத்தன. குறைந்த நேரத்தில் அதிக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
ஐந்தாவதாக, புதிய தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளும் பொதுமக்கள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தின. முன்பு, மாட்டு வண்டிகளும் படகுகளும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன. ஆனால், பின்னர் ரயில்பாதைகளும் நீராவிப் படகுகளும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டன. நாட்டின் உட்பகுதிகளை இணைக்கும் வகையில் சாலைகளும் போடப்பட்டன. இங்கிலாந்திலிருந்து எளிதாக உற்பத்திப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்தியர் பலர் வேலையிழந்தனர். இந்திய கைத்தொழில் வல்லுநரும், கலைப்பொருட்கள் செய்வோரும் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆங்கிலேய நிர்வாகங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் , இந்திய, பொருட்கள், வரலாறு, இங்கிலாந்து, பயன்படுத்தப்பட்டன, உற்பத்தி, வணிகக்குழு, நிர்வாகங்கள், ஆங்கிலேய, சீர்திருத்தங்கள், கொண்டு, ஆடம்பரப், செல்ல, கைத்தொழில், படகுகளும், பருத்தி, இயந்திரங்கள், பரம்பரை, பிரிட்டிஷ், சந்தையில், செய்யப்பட்ட, இந்தியா, பொருட்களின், பெருமளவு, இந்தியாவில், பொருட்களை, வகையில்