ஆங்கிலேய நிர்வாகங்கள் மற்றும் சீர்திருத்தங்கள்
மஸ்லின் துணிக்குப் பெயர் பெற்ற டாக்கா தவிர, கிருஷ்ணா நகர், சந்தேரி, ஆரணி, பனாரஸ் போன்ற ஜவுளி உற்பத்தி மையங்கள் புகழ் பெற்றவை. அகமதாபாத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, துப்பட்டா, லக்னோ சிகான், நாச்பூர் சரிகைப் பட்டுப்புடவை போன்றவையும் உலகப்புகழ் பெற்றவை. வங்காளத்திலிருந்த மூர்ஷிதாபாத், மால்டா தவிர, பிற சிறு நகரங்களும் பட்டுத்துணிக்கு பெயர் பெற்றவையாகும். காஷ்மீர், பஞ்சாப், மேற்கு ராஜஸ்தான் கம்பளித் துணிக்கு பெயர் பெற்றவையாகும்.
ஜவுளித் தொழில் தவிர, கப்பல் கட்டுதல், தோல் மற்றும் உலோக உற்பத்தியும் இந்தியாவின் சிறந்த தொழில்களாகும். பளிங்கு கற்களை வெட்டி வழவழப்பாக்குவது, தந்த வேலை, சந்தன சிற்பங்கள் இந்திய தொழில்களில் குறிப்பிடத்தக்கவையாகும். பித்தளை, செப்பு, வெண்கலப் பாத்திரங்களுக்கு மொராதாபாத், காசி ஆகிய நகரங்கள் பிரசித்தி பெற்றவை. நாசிக், பூனா, ஹைதராபாத், தஞ்சாவூர் சிறந்த உலோக வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றவை. கண்ணாடித் தொழில் கோல்ஹாபூர், சதாரா, கோரக்பூர், ஆக்ரா, சித்தூர், பாலக்காடு போன்ற இடங்களில் சிறந்து விளங்கியது. கட்ச், சிந்து, பஞ்சாப் ஆகிய இடங்களில் ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தங்கம், வெள்ளி, வைர நகைகள் உற்பத்தி இந்தியாவின் பல இடங்களில் நடைபெற்றன. இந்தியப் பொருளாதாரம் சுறுசுறுப்பாக இயங்கியது என்பதற்கு இத்தகைய கைத்தொழில்கள் சான்றாகும்.
இத்தகைய உலகப் புகழ்பெற்ற இந்திய கைத்தொழில் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சரியத் தொடங்கியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆங்கிலேய நிர்வாகங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் , வரலாறு, இந்திய, பெற்றவை, உற்பத்தி, பெயர், சீர்திருத்தங்கள், பெற்றவையாகும், நிர்வாகங்கள், தவிர, இடங்களில், ஆங்கிலேய, இந்தியா, இந்தியாவின், ஆகிய, இத்தகைய, சிறந்த, உலோக, தொழில், பஞ்சாப், உலகப், ஜவுளி, கைத்தொழில், சிறு, டாக்கா, மஸ்லின், புகழ், பனாரஸ், காஷ்மீர், இந்தியப்