ஆங்கிலேய நிர்வாகங்கள் மற்றும் சீர்திருத்தங்கள்
பஞ்சாப், மத்திய மாகாணங்கள், வடமேற்கு மாகாணங்களில் சில பகுதிகள் ஆகியவற்றில் 1833 ஆம் ஆண்டு மகல்வாரி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இம்முறையின்படி, கிராமம் அல்லது ஓரிரு கிராமங்கள் அடங்கிய மகல் அரசுக்கு வரி செலுத்தும் பொறுப்பை மேற்கொள்ளும் கிராமத்திலுள்ள நிலங்கள் கிராம சமுதாயத்துக்கு சொந்தம் என்பதால், அரசாங்கத்துக்கு வரிசெலுத்த வேண்டிய பொறுப்பும் கிராமத்தையே சார்ந்தது என்று விதிக்கப்பட்டது. வரி நிர்ணயம் செய்வதற்கு முன்பு கிராம நிலங்கள் அனைத்தும் அளக்கப்பட்டன. மகல்வாரி திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரியும் அதிகபட்சமாகவே காணப்பட்டது.
இத்திட்டத்தின்படி கிராம சமுதாயத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தரகர்கள் எவரும் இல்லை. சில இடங்களில் நீர்ப்பாசன வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால், அவற்றின் பலன்கள் அனைத்தும் அரசாங்கத்துக்கே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கைத்தொழில்கள்மீது பிரிட்டிஷாரின் கொள்கை
16 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு ஐரோப்பிய வணிகக் குழுக்கள் இந்தியாவிற்கு வரத்தொடங்கின. தொடக்கத்தில் அவர்களுக்குள் பலத்த வாணிகப் போட்டி நிலவியது. இந்திய வணிகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவர்கள் ஒவ்வொருவரும் பாடுபட்டனர். ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் குழுவும் அத்தகைய நோக்கத்தோடுதான் செயல்பட்டது. தனது முற்றுரிமையை நிலைநாட்டி மொத்த லாபத்தையும் தாமே பெறவேண்டும் என அது பாடுபட்டது. அதில் வெற்றியும் பெற்றது. 1833ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் இந்தியாவில் வணிகக் குழுவின் வணிகத்துக்கு முடிவு கட்டிய பிறகும், இந்தியாவின் செல்வத்தை சுரண்ட வேண்டும் என்ற கொள்கையை மட்டும் அது தொடர்ந்து பின்பற்றி வந்தது. இதற்கு முன் இந்தியாவில் ஆட்சி செய்தவர்களிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி இந்த விதத்தில் மாறுபட்டிருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆங்கிலேய நிர்வாகங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் , வரலாறு, இந்திய, கிராம, வணிகக், ஆங்கிலேய, மகல்வாரி, நிர்வாகங்கள், சீர்திருத்தங்கள், அனைத்தும், இந்தியாவில், ஆட்சி, நிலங்கள், இந்தியாவின், முறை, ஆண்டு, இந்தியா