ஆங்கிலேய நிர்வாகங்கள்
காரன்வாலிஸ் பிரபுவின் மிக முக்கியமான நிர்வாக சீர்திருத்தம் அவர் வங்காளத்தில் அறிமுகப்படுத்திய நிலையான நிலவரித் திட்டமாகும். பின்னர் இது பீகார் ஒரிசா பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டது. வாரன் ஹேஸ்டிங்ஸ் அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவருக்கு ஆண்டுக் குத்தகை விடும் முறையை அறிமுகப்படுத்தியது நமக்கு நினைவிருக்கும். இதனால், நிர்வாகக் குழப்பம் ஏற்பட்டது.
![]() |
காரன் வாலிஸ் பிரபு |
1. வங்காளத்தின் ஜமீன்தார்கள், அவர்கள் முறையாக கிழக்கிந்திய வணிகக் குழுவிற்கு வரி செலுத்தும் காலம் வரை நிலத்துக்கு உடைமையாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.
2. வணிகக் குழுவிற்கு ஜமீன்தார்கள் செலுத்த வேண்டிய வரி நிலையாக நிர்ணயிக்கப்பட்டு, அது எந்த சூழ்நிலையிலும் உயர்த்தப்பட மாட்டாது என்றும் உறுதியளிக்கப்பட்டது. அதாவது கிழக்கிந்திய வணிகக்குழு மொத்த வருவாயில் 89 சதவிகிதத்தை எடுத்துக்கொண்டு எஞ்சியதை ஜமீன்தார்களுக்கு விட்டுக் கொடுத்தது.
3. நிலத்தை உழுத குடியானவர்கள் குத்தகையாளர்களாகக் கருதப்பட்டனர்.
4. இத்திட்டத்தின்படி ஆட்சித்துறை, நீதித்துறை பொறுப்புகளிலிருந்து ஜமீன்தார்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆங்கிலேய நிர்வாகங்கள் , வரலாறு, குத்தகை, இந்திய, அவர், ஆங்கிலேய, நிலவரித், நிலையான, நிர்வாகங்கள், முறையை, ஜமீன்தார்கள், காலம், வணிகக், குழுவிற்கு, ஆகிய, கிழக்கிந்திய, பின்னர், காரன்வாலிஸ், இந்தியா, வங்காளத்தில், ஆண்டுக், விடும், வணிகக்குழு