இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம்
நாமதேவர் |
பக்தி இயக்கத்தின் சிறப்பு
பக்தி இயக்கத்தின் சிறப்பு குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு போதனையாளர்களும் தத்தம் பிராந்திய மொழிகளிலேயே எழுதியும் பேசியும் வந்தனர். எனவே, இந்தி, மராத்தி, வங்காளம், கன்னடம் போன்ற மொழிகள் வளர்ச்சியடைவதற்கு பக்தி இயக்கம் ஊக்கமளித்தது. இம்மொழிகள் வாயிலாக அவர்கள் தங்களது கருத்துக்களை நேரடியாகவே மக்களுக்கு எடுத்துக் கூறினர். சாதி முறையை பக்தி இயக்கத் தலைவர்கள் ஒருமித்த குரலில் சாடியதால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை உயர்வதற்கு பக்தி இயக்கம் வழிவகுத்தது.
பக்தி இயக்கம் பெண்களுக்கு சம முக்கியத்துவம் அளித்தமையால் சமுதாயத்தில் அவர்களது நிலை உயரவும் அது வழிவகுத்தது. மேலும், சிக்கலற்ற எளிய சமய வழியை பக்தி இயக்கம் மக்களுக்கு எடுத்துக்கூறியது. கடவுள்மீது தீவிர பக்தி செலுத்துமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். கொடைமிகுந்த வாழ்க்கை, மனித குலத்திற்கு சேவை போன்ற புதிய கருத்துக்கள் தோன்றி வளர்ந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம் , பக்தி, இயக்கம், வரலாறு, இந்திய, சாதி, இடைக்கால, அவர், இந்தியாவில், சிறப்பு, இயக்கத்தின், மக்களுக்கு, மக்கள், வழிவகுத்தது, நிலை, மராட்டிய, தாழ்த்தப்பட்ட, கருத்துக்கள், அவரது, இந்தியா, வந்தனர், நூற்றாண்டில், முறையையும், நாமதேவர்