இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம்
இடைக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு சமயத்தலைவர் குருநானக். அவர் சீக்கிய சமயத்தை நிறுவினார். தொடக்கத்தில் கபீரின் சீடராகவும் விளங்கினார். லாகூருக்கு அருகிலுள்ள தால்வாண்டி என்ற இடத்தில் குருநானக் பிறந்தார். ஜாதி வேற்றுமைகளைச் சாடிய அவர், புனித நதிகளில் நீராடுவது போன்ற சடங்குகளை இகழ்ந்தார். அவரது சமயக் கருத்துக்கள் ஒழுக்கத்தை வலியுறுத்துவதாகவும் அதே சமயம் நடைமுறைக்கு உகந்ததாகவும் இருந்தன.
குருநானக் |
வங்காளத்தில் கிருஷ்ண பக்தியைப் பரப்பிய சைதன்யர் மற்றொரு பக்தி நெறி பரப்பிய சீர்திருத்தவாதி. துறவறம் பூண்ட அவர் நாடெங்கும் சுற்றி தமது கருத்துக்களைப் பரப்பினர். மனித சகோதரத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். சமயம், சாதி அடிப்படையிலான வேறுபாடுகளை அவர் சாடினார். அன்பையும் அமைதியையும் வலியுறுத்திய சைதன்யர், துன்பப்படும் மக்களிடம் பரிவு காட்டினார். குறிப்பாக ஏழைகளிடமும் வலிமை குன்றியோரிடமும் கருணை காட்டினார். அன்பு, பக்தி, ஆடல், பாடல் மூலம் கடவுளைக் காணலாம் என அவர் நம்பினார். அனைத்து வகுப்பினரையும் தமது சீடர்களாக்கிக் கொண்டார். இன்றும்கூட வங்காளத்தில் சைதன்யரின் போதனைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம் , அவர், வரலாறு, பக்தி, இந்திய, குருநானக், இந்தியாவில், அவரது, இடைக்கால, இயக்கம், பரப்பிய, சைதன்யர், தமது, வங்காளத்தில், காட்டினார், அன்பு, இந்தியா, சமயம், கொண்டார், மற்றொரு