பக்தி இயக்கம்
ஒன்பதாம் நூற்றாண்டில் சங்கரர் இந்து சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டு இந்து சமயத்திற்கு ஒரு புதிய மார்க்கத்தை காட்டினார். கேரளாவிலுள்ள காலடியில் பிறந்தவர் சங்கரர், அவரது கோட்பாடான அத்வைதம் சாமானிய மனிதனின் அறிவுக்கு எட்டக்கூடியதாக இல்லை. மேலும் அத்வைத கோட்பாடான நிர்குண பிரமத்திற்கு எதிராக சர்குணபிரமம்
|
சங்கரர் |
என்ற கருத்தும் தோன்றியது. (நிர்குண பிரம்மம் கடவுள் குணாதிசயங்களற்றவன். சர்குண பிரம்மம் - கடவுள் குணாதியங்களை உடையவன்.)
|
இராமானுஜர் |
பன்னிரண்டாம் நூற்றாண்டில் சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும் புதூரில் பிறந்த இராமானுஜர் தனது 'விசிஷ்டாத்வைதம்' என்ற கோட்பாட்டைப்பரப்பினார். அவரது கருத்துப்படி கடவுள் சர்குணபிரமன் அல்லது குணாதிசயங்களையுடையவன். படைப்பு படைக்கப்பட்ட பொருட்களும் உண்மையானவை. சங்கரர் கூறியதைப் போல மாயை அல்ல என்பது அவர் வாதம். எனவே கடவுள், ஆன்மா, பொருள் அனைத்தும் உண்மைகளே. ஆனால் கடவுள் மனத்துக்கண் உள்ளது. மற்றவை அனைத்தும் அவரது குணாதிசயங்கள். ராமானுஜர் பிரபத்தி மார்க்கத்தை அல்லது கடவுள் முன்பு சரணடைவதை போதித்தார். தாழ்த்தப்பட்ட மக்களை வைணவ சமயத்தை பின்பற்றும்படி ராமானுஜர் அழைப்பு விடுத்தார்.
|
வல்லபாச்சாரியர் |
பதிமூன்றாம் நூற்றாண்டில் கர்நாடகாவைச் சேர்ந்த மத்துவர் ஜீவாத்மா, பரமாத்மாவை உள்ளடக்கிய த்வைத தத்துவத்தை பரப்பினார். அதன்படி உலகம் மாயை அல்ல, உண்மை. கடவுள், ஆன்மா, பொருள் ஒவ்வொன்றும் சிறப்பானது. தெலுங்கானா பகுதியில் நிம்பார்க்கர், வல்லபாச்சாரியர் வைணவ பக்தியைப் பரப்பினர். வல்லபாச்சாரியார் வட இந்தியா சென்று அங்கு கிருஷ்ணபக்தியைப் பரப்பினார். அவர் சூத்திரர்களையும் தமது சீடர்களாகக் கொண்டிருந்தார். மீராபாய் சிறந்த கிருஷ்ண பக்தையாகத்திகழ்ந்தார். அவரது மீராபஜன்கள் ராஜஸ்தானில் பிரசித்தி பெற்றவை. துளசிதாசர் ராமபக்தராக விளங்கினார். ராமாயணத்தின் இந்தி மொழி வடிவமான 'ராம் சரித்மனஸ்' என்ற புகழ்பெற்ற நூலை துளசிதாசர் படைத்தார்.