1857 ஆம் ஆண்டு பெருங்கலகம்
இந்திய மக்களின் ஆழ்மனதில் ஊறிக்கிடந்த தேசியத்திற்கான விதைகளை 1857 ஆம் ஆண்டு கலகம் ஊன்றியது. 1947 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற இடைவிடாத போராட்டத்தின் துவக்கமாக இக்கலகம் இருந்தது. எனவே 1857 ஆம் ஆண்டு பெருங்கலகத்தின் தன்மை, பண்பு மற்றும் காரணங்களை நன்கு ஆய்வதன் மூலம் அதற்குப்பின் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நன்கு புரிந்துகொள்ளலாம்.
கலகத்தின் தன்மை
சிப்பாய் கலகம் |
ஆர்.சி. மஜும்தார், எஸ்.என். சென் என்ற இரண்டு இந்திய வரலாற்று அறிஞர்கள் 1857 ஆம் ஆண்டு கலகத்தை ஆழ்ந்து ஆய்வு செய்துள்ளனர். இவ்விருவருமே தங்களது கருத்துக்களில் மாறுபடுகின்றனர். எஸ்.என். சென் 1857 ஆம் ஆண்டு கலகம் இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதி என்று கருதுகிறார். ஆர்.சி. மஜும்தார் 1857 ஆம் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சிவில் அல்லது ராணுவ கிளர்ச்சிகள் அனைத்தும் ஆங்காங்கே நடைபெற்றவை என்றும், பின்னர் அவை 1857 ஆம் ஆண்டு பெரும் கலகமாக உச்சவடிவம் பெற்றது என்றும் குறிப்பிடுகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆண்டு, இந்திய, வரலாறு, என்றும், பெருங்கலகம், கலகம், சென், அறிஞர்கள், வரலாற்று, கலகத்தை, மஜும்தார், நன்கு, இந்தியா, நடைபெற்ற, தன்மை, கலகத்தின், பிரிட்டிஷ்