1857 ஆம் ஆண்டு பெருங்கலகம்
கலகத்தின் தோற்றம்
கொழுப்பு தடவிய தோட்டக்கள் 1857 ஆம் ஆண்டு கலகத்துக்கு உடனடி காரணமாக அமைந்தன. இந்திய ராணுவத்தில் புதிய வகை என்பீல்டு துப்பாக்கிகள் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் தோட்டாக்களில் கொழுப்பு தடவப்பட்டிருந்தன. துப்பாக்கிகளுக்குள் பொருத்தப்படுவதற்கு முன்பு சிப்பாய்கள் அதனை வாயால் கவ்வி உறைகளை அகற்ற வேண்டியதாக இருந்தது. அதில் தடவப் பட்டிருந்த கொழுப்பு மாட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சியிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இதனால் இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்களின் சமய உணர்வுசுள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அரசாங்கம் வேண்டுமென்றே தங்களது சமய மற்றும் கலாச்சார அடையாளங்களை அழிக்க முற்படுகிறது என சிப்பாய்கள் எண்ணினர். எனவே அவர்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
1857 மார்ச் 23 ஆம் நாள் பாரக்பூரில்தான் முதலில் கலகம் வெடித்தது. மங்கள் பாண்டே என்ற சிப்பாய் கொழுப்பு தடவிய தோட்டாக்களை பயன்படுத்த மறுத்து தன்னந்தனியாகவே தனது அதிகாரியைத் தாக்கி அவரைக் கொன்றார். இதற்காக, மங்கள்பாண்டே தூக்கிலிடப்பட்டார். அவனது படைப்பிரிவும் கலைக்கப்பட்டது. கிளர்ச்சிக்கு காரணமாக இருந்த சிப்பாய்களும் தண்டிக்கப்பட்டனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வரலாறு, ஆண்டு, இந்திய, கொழுப்பு, பெருங்கலகம், காரணமாக, சிப்பாய்கள், இந்தியா, சிப்பாய்களின், தடவிய