முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » மேரி கியூரி (கி.பி.1867 - கி.பி.1934)
மேரி கியூரி (கி.பி.1867 - கி.பி.1934)

இந்தப் பட்டியலில் முதல் நூறு பேரில் நான் சேர்த்துள்ள விஞ்ஞானிகள் பலரையும் விட மிகுந்த புகழ் பெற்றவர் மேரி கியூரி (Mari Curie) அம்மையார் ஆவார். இவரது இயற்பெயர் மரியா ஸ்க்லோடோவ்ஸ்கா என்பதாகும். இவர் பெற்ற பெரும் புகழுக்கு காரணம் இவர் ஆற்றிய அறிவியல் பணியின் முக்கியத்துவம் என்பதைவிட, அதனை ஒரு பெண்மனியும் தலைசிறந்த ஆராய்ச்சிகளைச் செய்து பெருஞ்சாதனை புரிய முடியும் என்பதை இவருடைய வாழ்க்கை திட்டவட்டமாக எடுத்துக் காட்டியது. இக் காரணத்தினாலேயே இவர் பெரிதும் போற்றப்பட்டார். மேலும், கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தவர் இவர் தான் எனப் பலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் கதிரியக்கத்தைக் கண்டுபித்தவர் ஆண்ட்வான் ஹென்றி பெக்கரலே யாவார். கதிரியக்கத்தை முதலில் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர் பெக்கரல்தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஏனெனில் பெக்கரலின் கண்டுபிடிப்பு பற்றிய ஒரு கட்டுரையைப் படித்த பின்புதான் மேரி கியூரியும் அவருக்கு இணையாகத் திறமை வாய்ந்த விஞ்ஞானியாக விளங்கிய அவருடைய கணவர் பியெர் கியூரியும் கதிரியக்கம் குறித்து தங்கள் ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்கள்.
மேரி கியூரியின் மிகச்சிறந்த சாதனையாகப் போற்றப்படுவது ''ரேடியம்'' (Radium) என்ற வேதியியல் தனிமத்தைக் கண்டுபிடித்தது. அதனைப் பிட்ச்பிளெண்ட (Pitchblende) என்னும் தாதுவிலிருந்து பிரித்தெடுத்ததாகும். இதற்கு முன்னர், மேரி கியூரி வேறோர் தனிமத்தையும் கண்டுபிடித்து அதற்கு தம் தாய்நாட்டின் (போலந்து) நினைவாகப் ''பொலோனியம்'' (Polonium) என்று பெயரிட்டார். இவை பாராட்டத்தக்க சாதனைகளே யாயினும் அறிவியல் கோட்பாட்டில் இவை பெரும் முக்கியத்துவம் பெற்றவையாக இல்லை.
மேரி கியூரி, பியெர் கியூரி, பெக்ரேல் ஆகிய மூவருக்கும் 1903 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் மீண்டும் மேரி கியூரிக்கு வேதியியல் சாதனைக்கான நோபல் பரிசு வழங்கப் பெற்றது. இதன் மூலம் முதன் முதலில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கும் இவர் உரியவரானார்.
மேரி கியூரி தமது முக்கியமான அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு மிக இளங்குழந்தைகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மூத்த மகள் ஐரின்கியூரியும் (Irene Curie) பிற்காலத்தில் மிகுந்த வெற்றிகரமான விஞ்ஞானியாகிய ஜீன் ஃபிரடரிக் ஜோலியோட் (Jean Frederic Joliot) என்பவைரத் திருமணம் செய்து கொண்டார். இவ்விருவரும், இணைந்து கதிரியக்கம்பற்றி தொடர்ந்து ஆராய்ந்து கதிரியக்கத்தைச் செயற்கை முறையில் உண்டாக்கும் வழியொன்றைக் கண்டுபிடித்தனர். இந்தக் கண்டுபிடிப்புக்காக, ஐரின் கியூரிக்கும் அவரது கணவருக்கும் 1935 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது மேரி கியூரியின் இரண்டாவது மகள் ஈவ் கியூரி (Eve Curie) சிறந்த இசைச் கலைஞராகவும் எழுத்தாளராகவும் புகழ் பெற்றார் எத்துணை புகழ் வாய்ந்த குடும்பம்!
மேரி கியூரியின் புகழுக்குக் காரணமாக இருந்த ரேடியமே அவருடைய மரணத்திற்கும் காரணமாயிற்று. நெடுங்காலம் கதிரியக்கத் தனிமங்களை ஆராய்ந்து வந்தமையால், கதிரியக்கத்தின் தீயவிளைவுகளுக்குள்ளாகிச் சோகை நோயால் (Leukemia) மேரி கியூரி 1934 ஆம் ஆண்டில் காலமானார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 92 | 93 | 94 | 95 | 96 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மேரி கியூரி (கி.பி.1867 - கி.பி.1934), மேரி, கியூரி, இவர், நோபல், பரிசு, ஆண்டில், கியூரியின், புகழ், அறிவியல், curie, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்