முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » சொராஸ்டர் (கி.மு.628 - கிமு.551)
சொராஸ்டர் (கி.மு.628 - கிமு.551)

சொராஸ்டிரியம் எனப்படும் சொராஸ்டிரா சமயத்தை நிறுவிய ஈரானியத் தீர்க்கதரிசி சொராஸ்டர்ஆவார். இவர் நிறுவிய சமயம் 21,500 ஆண்டுகளுக்கும் மேல் நிலை பெற்று, இன்றும் ஆதரவாளர்களைக் கொண்டிருக்கிறது. சொராஸ்டர்களின் திருமறையாகிய "அவெஸ்தா"வின் மிகத் தொன்மையான பகுதியாகிய "கதஸ்" எனற மறை நூலின் ஆசிரியரும் இவர்தான்.
பண்டைய ஈரானிய மொழியில் "சொராதுஸ்டிரா" என்ற இயற்பெயர் கொண்ட இவருடை வாழ்க்கை வரலாறு பற்றிக் கிடைக்கும் தகவல்கள் மிகக் குறைவு. எனினும், இன்றைய வடக்கு ஈரானில் கி.மு. 628 ஆம் ஆணடில் இவர் பிறந்ததாகத் தெரிகிறது. இவருடைய இளமைக்கால வாழ்வு பற்றியும் செய்திகள் இல்லை. வயது வந்ததும் இவல் தாம் உருவாக்கிய புதிய சமயத்தைப் போதிக்கத் தொடங்கினார். முதலில் இவருக்கு எதிர்ப்பு தோன்றியது எனினும், இவர் தமது 40 ஆம் வயதில் வடகிழக்கு ஈரானிலிருந்த ஒரு மண்டலத்தின் மனனராகிய விஷ்டாஸ்பா என்பவரைத் தம் சமயத்திற்கு மாற்றுவதில் வெறறி கண்டார். அதன் பின்பு, இந்த அரசர் சொராஸ்டரின் நெருங்கிய நண்பராகவும், பாதுகாவலராகவும் ஆனார். ஈரானிய வழிவழி மரபுச் செய்தியின் படி, சொராஸ்டர் 77 வயது வரை வாழ்ந்தார். எனவே, இவர் கி.மு. 551 ஆம் ஆண்டு வாக்கில் இறந்தார் எனக் கொள்ளலாம்.
அத்துவைதமும், துவைதமும் இணைந்த ஒரு கவர்ச்சியான கலவையாக சொராஸ்டரா இறைமையியல் அமைந்ததுள்ளது. சொராஸ்டர் போதனைப் படி, ஒருவனே தேவன், அவனை அவர் 'அஹூரா மாஜ்டா' (இன்றைய ஈரானிய மொழியில் 'ஓர்மஜ்டு') எனறு அழைக்கிறார். 'மெய்யறிவுப் பெருமான்' என்று இதற்குப் பொருள். அவன் நேர்மையினையும் வாய்மையினையும் ஊக்குவிக்கின்றான். ஒரு தீயசக்தி இருப்பதாகவும் செராஸ்டர்கள் நம்புகிறார்கள். இதனை அவர்கள் 'அங்ரா மைன்யூ' (இன்றைய ஈரானிய மொழியில் 'அஹ்ரிமான்') என அழைக்ககிறார்கள் இந்த சக்தி தீமையினையும், பொய்மையினையும் குறிக்கிறது. உண்மை உலகில் , நன்மைக்கும் தீமைக்குமிடையே இடையறாத போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இப் போராட்டத்தில் நன்மையை ஆதரிப்பதா, தீமையை ஆதரிப்பதா என்பதை ஒவ்வொரு தனிநபரும் தேர்ந்தெடுந்துக் கொள்ள உரிமையுடையவர். இவ்விரு தரப்புகளுக்கிடையிலான போராட்டம் தற்போதைக்கு மிக நெருங்கிய போராட்டமாக இருந்த போதிலும், நீண்ட காலப் போக்கில் நன்மையே வெல்லும் என்று சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். மறுமை வாழ்விலும் அவர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
அறநெறிப் பொருட்பாடுகளைப் பொறுத்தவரையில் நேர்மை வாய்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சொராஸ்டரா சமயம் வலியுறுத்துகிறது. துறவு வாழ்வு, மணத் துறவு இரண்டடையுமே இந்தச் சமயம் எதிர்க்கிறது. பல விசித்திரமான சமயச் சடங்குகளையும் சொராஸ்டர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இவற்றுள் சில சடங்குகள் நெருப்பிடம் அவர்களுக்குள்ள பக்தியை மையமாகக் கொண்டவை. எடுத்துக்காட்டாக ஒரு புனிதப் பிழம்பு செராஸ்டரின் கோயிலில் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கச் செய்கிறார்கள். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதற்காகக் கையாளும் முறைதான் அவர்களுடைய சமயச் சடங்குகளிலே மிகவும் விசித்திரமானதாகும். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதோ, புதைப்பதோ இல்லை. மாறாக, கோபுரங்களின் உச்சியில் கொண்டுபோய் வைத்து கழுகுகள் தின்னும்படி விட்டுவிடுகிறார்கள். (பிணத்தைக் கோபுரத்தில் வைத்த சில மணி நேரத்திற்குள்ளேயே கழுகுகள் அதன் தசைகளைத் தின்றுவிட்டு எலும்புகளை மட்டுமே மிச்சம் வைக்கின்றன.
பண்டைய ஈரானியச் சமயங்களில் காணப்படும் பல அம்சங்கள் சொராஸ்டரா சமயத்தில் காணப்பட்ட போதிலும், அது சொராஸ்டரின் ஆயுட்காலத்தில் அதிகமாகப் பரவியதாகத் தெரியவில்லை. ஆனால், அவர் வாழ்நத மண்டலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சொராஸ்டர் காலமான சமயத்தில மா சைரசினால் பாரசீகப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்பட்டது. அடுத்த 200 ஆண்டுகளின் போது, பாரசீக மன்னர்களின் இந்தச் சமயத்தைத் தழுவினார்கள். இந்த சமயத்திற்கும் ஆதரவு பெருகியது. கி.மு.நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாரசீகப் பேரரசை மகா அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பிறகு, சொராஸ்டர் சமயத்திற்குக் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் இறுதியில், பாரசீகர்கள் மீண்டும் அரசியல் சுதந்திரம் பெற்றதும், பாரசீகத்தில் கிரேக்கப் பண்பாடு வீழ்ச்சியுற்று, மறுபடியும் சொராஸ்டரா சமயம் தலைதூக்கியது. சஸ்ஸானிட் அரசர்களின் ஆட்சியின் போது (கி.பி. 226-651) சொராஸ்டரா சமயம் பாரசீகத்தின் அரசுச் சமயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லிம்கள், வெற்றி கொண்ட பின்பு, பாரசீக மக்களில் பெரும்பாலோர் படிப்படியாக இஸ்லாமிய சமயத்தைத் தழுவினார்கள். (கொள்ளைகயளவில் முஸ்லிம்கள் பழைய சமயத்திடம் சகிப்புணர்வுடையவர்களாயினும், சில நேரங்களில் கட்டயாமாகவும் இந்த மதமாற்றம் நடைபெற்றது) எஞ்சியிருந்த சொராஸ்டர்களும் பத்தாம் நூற்றாண்டில் ஈரானிலிருந்து பாரசீக வகைளகுடாவிலிருந்த ஹோர்மஸ் என்ற தீவுக்குத் தப்பியோடினார்கள். அங்கிருந்து அவர்கள் அல்லது அவர்களுடைய சந்தததியினர் இநதியாவுக்குச் சென்று அங்கு ஒரு சிறு குடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர். இவர் பாரசீக மரபினர் என்பதால் இவர்களைப் பார்சிகள் என்று இந்துக்கள் அழைத்தனர். (சொராஸ்டிரா சமயமும், பால்சி சமயம் என அழைக்கப்பட்டது) இன்று இந்தியாவில் ஏறத்தாழ 1,00,000 பால்சிகள் வாழ்கிறார்கள், இவர்களில் பெரும்பாலும் பம்பாய் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கிறார்கள். பார்சிகள் ஓரளவுக்குச் செல்வச் செழிப்புமிக்க சமுதாயமாகத் திகழ்கின்றனர். ஈரானிலும் சொராஸ்டர சமயம் அடியோடு மறைந்து விடவில்லை. எனினும், அங்கு இன்று சுமார் 20,000 சொராஸ்டர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.
பல மனைவியர் வாழ்க்கை முறையினைக் கொண்ட மோர்மோன்களையும் கடவுட்பற்று மூலமே நோய்க்குணம் காட்டும் கிறிஸ்துவ விஞ்ஞானிகளையும் விட, இன்று உலகில் சொராஸ்டர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆனால், மோர்மோன் தத்துவமும், கிறிஸ்துவ விஞ்ஞானத் தத்துவமும் மிக அண்மையில் தோன்றியவை. வரலாற்றில் மிக நெடுங்காலம் வரை, செராஸ்டர்களின் மொத்த எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. அதனாலேயே மோர்மோனியத்தை நிறுவிய ஜோசப் ஸ்மித், மேரி பேக்கர் எட்டி ஆகியோர் விட்டுவிடப்பட்டிருக்கும்போது, சொராஸ்டர் இந்த நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மேலும், யூத சமயம் கிறிஸ்துவம் போன்ற பிற சமயங்ககளில், சொராஸ்டரா இறைமையியல் செல்வாக்குப் பெற்றது. அதைவிடவும் மானிக்கே சமயத்தில் சொராஸ்டரா சமயத்தின் செல்வாக்கு மிக அதிகம். மானிக்கே சமயத்தை நிறுவிய மானி, நன்மைக்கும் தீமைக்குமிடையிலான போராட்டம் பற்றிள கொள்கையை எடுத்து கொண்டு, அதை மேலும் விரிவுபடுத்தி, அதை ஒரு கூட்டிணைவான கவர்ச்சிமிகு இறைமையியலாக உருவாக்கினார். மானி உருவாக்கிய சமயம் சிறிது காலம் உலகின் பெரிய சமயங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. எனினும், அந்தச் சமயங்கூட இப்போது முற்றிலுமாக அற்றுப் போய்விட்டது.
சொ‘ராஸ்டிரா சமயம் உலகின் மிகத் தொன்மையான சமயங்களில் ஒன்றாக இருந்த போதிலும், அது ஒருபோதும், ஓர் உலக சமயமாகப் பரவியிருக்கவில்லை. அது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருந்தது. எனவே, புத்தம், கிறிஸ்துவம் , இஸ்லாம் போன்ற சமயங்களில் முக்கியத்துவத்துடன் செராஸ்டரா சமயத்தை ஒப்பிட முடியாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சொராஸ்டர் (கி.மு.628 - கிமு.551), சமயம், சொராஸ்டரா, சொராஸ்டர், இவர், எனினும், கொண்ட, சமயங்களில், பாரசீக, நிறுவிய, ஈரானிய, மட்டுமே, இன்று, சொராஸ்டர்கள், இன்றைய, ", மொழியில், சமயத்தை, போராட்டம், போதிலும், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்