பொதுஅறிவுக் கட்டுரைகள் - படிக்க கால அட்டவணை

தேர்வுக்கு தயார் செய்வது என்பது ஒரு காலையே. இதற்கு திட்டமிடல் ஊக்கம், விடா முயற்சி, கடும் உழைப்பு மிக அவசியம். எந்த நேரங்களில் படிக்க வேண்டும் என்பதை நமக்கு நாமே வரை முறைப்படுத்தி அட்டவணை தயார் செய்து கொள்வது, சிறப்பான பலனைத்தரும். மாணவ மாணவிகள் தங்களை தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் இங்கு ஒரு மாதிரி கால அட்டவணை தயாரித்து தந்துள்ளோம். இதை அடிப்படையாக கொண்டு மாணவ-மாணவிகள் தங்களது வசதிக்கு ஏற்ப அட்டவணை தயார் செய்து கொள்ளலாம்.
நேரம் செயல் திட்டம்
காலைமேலே குறிப்பிட்டுள்ள மாதிரி அட்டவணையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இடையில் 15 நிமிடம் ஒய்வு எடுக்கும் படி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் இனிய இசையை கேட்பது, புத்தகம் வாசிப்பது, வீட்டில் பெற்றோருக்கு உதவி செய்வது, சிறிய சிறிய வீட்டு வேலைகளில் ஈடுபடுவது போன்ற பணிகளில் ஈடுபடலாம்.
5 மணி கண் விழித்தல்
05.15-06.15 படிப்பு
06.30-07.30 படிப்பு
07.30-08.00 உடற்பயிற்சி (யோகாசனம், மூச்சுப் பயிற்சி, தியானம்)
08.00-09.00 குளித்தல், காலை உணவு
09.00-10.00 படித்தவற்றை எழுதிப்பார்த்தல்
10.15-11.15 படிப்பு/எழுதுதல்
11.30-12.30 படிப்பு/எழுதுதல்
12.30-01.00 மதிய உணவு
மதியம்
01.00-02.00 ஓய்வு/உறக்கம்
02.15-03.15 படிப்பு/எழுத்து
03.30-04.30 படிப்பு/எழுத்து
04.30-05.00 எளிய உடற்பயிற்சி (இறகு பந்து விளையாட்டு நல்லது)
05.15-06.15 படிப்பு
06.30-07.30 படிப்பு
இரவு
07.30-08.30 இரவு உணவு/ஓய்வு
08.30-09.30 படிப்பு/எழுத்து
09.30-10.10 படித்தவற்றை நினைவுபடுத்துதல் அடுத்த நாள் என்ன படிக்க வேண்டும் என்று திட்டமிடல்
10.00-05.00 தூக்கம்
படிப்பு என்று குறிப்பிட்டுள்ள நேரத்தில் பாடங்களை படித்து மனப்பாடம் செய்யும் பணிகளை மேற்கொள்ளலாம்.
படிப்பு/எழுத்து என்று குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் கணக்குகள் போட்டு பார்ப்பது, வரைபடங்கள் வரைந்து பழகுதல் முக்கியமான சூத்திரங்கள், வேதியியல், இயற்பியல் சூத்திரங்கள், கணக்குகளை எழுதிப்பார்த்து பழகலாம்.
காலை நேரங்களில் எளிய யோகாசனம் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவை நல்லது. இது மனதை அமைதிப்படுத்தும் உடலுக்கு பலத்தை ஏற்படுத்தும்.
மாலை நேரத்தில் இறகு பந்து போன்ற விளையாட்டில் (ஒற்றையர் ஆட்டம்) ஈடுபடுவது நல்லது. ஏன் என்றால் இந்த ஆட்டத்தின் போது நமது கவனம் முழுவதும் பந்தின் மீது இருக்கும். இதனால் நமது மனம் ஒருமுகப்படுத்தும் பயிற்சியும் ஒரே நேரத்தில் கிடைக்கும்.
இந்த கால அட்டவணையில் ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் தங்கள் பாடத்திட்டத்துக்கு ஏற்ப எந்த நேரத்தில் என்ன பாடங்கள் படிக்க வேண்டும் என்பதை குறித்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப பாடங்களை படித்து எழுதிப்பார்த்து பழகிக்கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது மாதிரி அட்டவணை மட்டுமே. சிலருக்கு அதிகாலை 3 மணி அல்லது 4 மணிக்கு எழுந்து படிக்கும் பழக்கம் இருக்கலாம். சிலருக்கு இரவில் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருக்கலாம். எனவே மாணவ-மாணவிகள் தங்கள் படிக்கும் பழக்கம் மற்றும் வசதிக்கு ஏற்ப கால அட்டவணையை தயார் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்காக தீவிரமாக படிக்கும் காலங்களில் எளிதில் ஜீரணமாகும் சத்தான உணவுகளை சாப்பிடுவது நல்லது. அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர் கால் வயிறு காற்று இருப்பது போல உணவு உட்கொள்ள வேண்டும். குறைவாக சாப்பிடும்போது பசி ஏற்பட்டு கவனம் சிதறும், அதிகமாக சாப்பிட்டால் மந்த நிலையும் தூக்கமும் ஏற்படும். எனவே இதை தவிர்க்க அரை வயிறு உணவு கால் வயிறு தண்ணீர் என்று உணவு பழக்கம் இருப்பதே சிறப்பு
தேடல் தொடர்பான தகவல்கள்:
படிக்க கால அட்டவணை - General Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள்