பொதுவான கட்டுரைகள் - இயற்கை வளம் மீட்டிட...

- மருத்துவர் அ. காசி பிச்சை
இயற்கை முறை வாழ்வியல் ஒன்றும் புதிய சரக்கல்ல. தமிழனிடம் ஒரு காலத்தில் இருந்த கலாச்சாரப் பண்பை மீண்டும் ''மீட்டெடுக்கும் முயற்சி'' பழைய கிணற்றை தூர்வாரி, ''ஊற்றுக்கண்'' திறக்கும் முயற்சி: பாத்திரத்தைத் தேய்த்து, பளபளப்பாக்கும் ஆர்வம்; புழுதி படிந்த மூளையைத் தூசு தட்டி, சலவை செய்து, இயங்கவைக்க எடுக்கும் உயிரூட்டி வேலை. அவ்வளவுதான்.
செயற்கையான மின்சக்தி வரும்முன் இயற்கையான ''நிலவொளி'' யில் தமிழன் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறான் என்பதை, ''நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா முற்றம்'' என்றும், ''ஞாயிறு போற்றதும்'' ''திங்களைப் போற்றுதும்'' என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் போற்றியுள்ளதிலிருந்து ஒன்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது: மின் விசிரிகளும் குளிரூட்டிகளும் இல்லாத காலத்தில் தமிழன் ''தென்றல்'' சுகத்தில் மிதந்திருக்கிறான் என்பதை தென்றல் சுகம் பேசாதத் தமிழ் இலக்கியம் எதுவும் இல்லை அதனால் தான் தமிழ் முறைத் திருமணங்கள் முழு நிலவு நாளில், இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப் பொழுதில் நடத்தப் பெற்றிருக்கிறது. முழுநிலவு நாள் என்பதுது‘ன் ''முழுக்கம்'' என்பது .முழுத்தம் தான் மருவி முகூர்த்தமாகி விட்டது. முழுநிலவு நாள் காலப்போக்கில் வளர்பிறை காலமாகிவிட்டது. வளர்பிறை காலம் கூட மக்கள் நடமாட்டத்திற்குத் துணை புரியும் நிலவொளிக்காக ( மின்சக்தி இல்லாத காலம் ) ஏற்பட்டதேயன்றி திருமணத்தம்பதிகளின் வாழ்க்கை ''வளர்ந்துகொண்டே'' இருக்கும் என்பதற்காக அல்ல.
இயற்கை வழங்கிய வசதிக்கு ஏற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கெண்டிருந்தவன் தமிழன். தமிழ் நாட்டு வரலாற்றில் மன்னர்களின் பெருமை பேசியவர்கள், கரை அமைத்தான், கரை நெடுக மரம் வளர்த்தான், ஏரிகுளம் அமைத்தான் நீர்நிலை பெருக்கினான், நீர்ப் பாசனமுறை சீர்படுத்தினான், கண்மாய் அமைத்தான், அதற்குக் காவலர்களை நியமித்தான் என்பதான கல்வெட்டுகளைக் காட்டியிருக்கிறார்கள்.
மனித இனம் உட்பட உயிரினங்கள் வாழ ''உயிர்க்காற்று'' (ஆக்சிஜன்) தேவை. இந்த உயிர்க் காற்றை உற்பத்தி செய்தும், நாம் வெளியேற்றும் கரிக்காற்றை உயிர்க்காற்றாக்கி உயிர்ப்பித்துத் தரக்கூடிய ''இயற்கை தொழிற்சாலை'' மரங்கள் தான் என்பதை அறிந்திருந்தான். ஆகவே மரங்கள் வளர்த்தான். இன்று சாலை ஓரங்களில் காணப்படும் மரங்களில் சுதந்திரத்திற்குப் பிறகு வைக்கப்பட்ட 55 வயதுக்கு உட்பட்ட மரங்களைக் காட்ட முடிகிறதா? எல்லாமே நூற்றாண்டுகளுக்கு மேல் வயது முதிர்ந்த மரங்கள்தான் நின்று நிமிர்ந்து உயிரினங்களைப் பாதுகாத்து வருகின்றன.
இன்னும் 50 அல்லது 100 ஆண்டுக்காலம் போனால், இருக்கும் இன்றைய மரங்களும் அழிக்கப்பட்ட பின், இயற்கையான உயிர்காற்றுக்கு எங்கே செல்வது? போத்தல்களில் தண்ணீர் எடுத்துச் செல்லும் பழக்கம்போல முதுகில் ஆக்சிஜன் குடுவைகளைத் தூக்கிச் சுமக்க நேருமோ! கொடுமை! கொடுமை!!
2. உலக மகன்
முற்காலத்தமிழன் கற்றிருந்ததை இக்காலத்தமிழன் கொலை செய்து வருகிறானே என்பது கவலைப்படவைக்கிறது.
உயிர்கள் விடும் கரியமிலக்காற்று மட்டுமா? கார்களின் கரிப்புகை, எந்திரப் பெருக்கத்தின் கழிவுப் புகைகள், அவைகளின் நச்சுக்காற்று இத்தனையையும் சேர்த்தல்லவோ இருக்கும் மரங்கள் புதுப்பித்துத்தர வேண்டியிருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால், இந்த நச்சுக்காற்று மரங்களையும் உயிர் வாழ முடியாமல் அழித்துவிடுமோ? கதிர் வீச்சுகளின் தாக்கத்திலிருந்தும், அணுகுண்டுகளின் அழித்தொழிப்பிலிருந்தும், மரங்கள் தப்பிக்க முடியாமல் ஒரே வினாடியில் அழிக்கப்பட்டு விட்டால்? உயிரினங்கள் அனைத்துமே அழிந்துவிடும் அபாயம் நோக்கித்தான் அறிவியல் நம்மை வழி நடத்திச் செல்கிறதோ?
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் கடந்த 50 ஆண்டுகளில், மக்கள் தொகை 4 கோடியிலிருந்து 8 கோடியை எட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகை 40 கோடியிலிருற்து 105 கோடிக்கு உயர்ந்து விட்டது. உலக மக்கள் தொகை 200 கோடியிலிருந்து 600 கோடியாகத் தாவிப்படர்ந்து விட்டது. இவர்களுக்கான இறைச்சி உணவுக்காக கோடிக்ணக்கான கோழிகள், ஆடுகள், மாடுகள், பன்றிகள் விடும் கரியமில வாயுவையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக தெள்ளெனத் தெரிவது, நாம் எல்லோருமே நச்சுக்காற்றை உட்கொண்டு தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். இந்தத் ''தாங்குதல் சக்தி'' சில ஆண்டுகளுக்குத் தாக்குபிடிக்கலாம். எதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா! அந்த எல்லையை அடையும்போது, உலக உயிர்கள் அழியத்தான் வேண்டுமோ?
உலக உயிர்களுக்குத் தேவையான இயற்கையான உயிர்க்காற்று உற்பத்தி குறையக் குறைய ''ஓசோன்'' படலத்தில் ஓட்டை விழாமல் என்ன செய்யும்? வளி(காற்று) மண்டலமே சூடாகிக் கொண்டே போகிறது. இந்தச் சூட்டில் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் அழிந்துபடாமல் இருக்குமோ? இதன் வளர்ச்சி குடி நீர் பற்றாக்குறையில்தான் முடியப்போகிறது. நீர் என்பதே இரண்டு பங்கு நீர்மவளியும், ஒரு பங்கு உயிர் வளியும் சேர்ந்த கலவைதானே! இயற்கையாக இந்த வித மூலக்கூறுகள் காற்றில் ஒன்றுடன் ஒன்று கலக்கும் போதுதான் இடிஇடித்து நீர்த்திவலை - மழைநீர் - ஏற்பட்டு, வானிலிருந்து கொட்டுகிறது.
ஆக, மூச்சுக் காற்றுக்கு மட்டுமல்லாது, உட்கொள்ளும் குடிநீருக்கும் அடிப்படை ஆதாரம் ''உயிர்காற்று'' (ஆக்சிஜன்) தான். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 18,000 லிட்டர் காற்று மூச்சுவிடத் தேவைப்படுகிறது. மூச்சு விடுதலுக்காக மட்டும் உயிர்காற்றை எடுத்துக் கொள்பவர்கள், வாழ்நாளில் 10 மரங்கள் நட்டு வளர்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வதாக இருந்தால் கூட, தங்களின் இருசக்கர வண்டிகள், கார், போருந்து, சுமையுந்து, தொழிற்சாலை மூலம் உயிர்க் காற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் பணக்காரர்கள், ஆயிரக்கணக்கான மரங்கள் நட்டு, பாதுகாத்து, நாட்டுக்காக மனித சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டிய கடமையுள்ளவர்களாகிறார்கள் என்று பொருள். செய்ய வைத்திருக்கிறோமா? மரம் என்பது உயிர்காற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்று புரிய வைத்திருக்கிறோமா? அவர்கள் உண்பதற்கு உணவுதான் உற்பத்தி செய்து தருகிறோம் என்றால், அவர்கள் மூச்சுவிட உயிர் காற்றைக்கூட அடுத்தவர்தான் உற்பத்தி செய்துதர வேண்டுமா? இதுகூட முடியாதவர்கள் உயிர் வாழ்வதில் என்ன பொருள் இருக்கிறது?
உண்மையான மக்களுக்கான அரசாங்கமாக இருந்தால், உயிர்க் காற்றை அதிக அளவு பயன்படுத்தும் (மாசு படுத்தும்) பணக்காரர்களுக்கு ''இயற்கை அழிப்புவரி'' போட வேண்டும். மரம் வளர்த்து ''உயிர்க்காற்றை'' உற்பத்தி செய்யும் வேளாண் தொழிலாளிக்கு ''உயிர்காப்புக்சலுகை'' மானியமாக அளிக்கப்படவேண்டும். ஆனால் இன்று நேர் எதிரான நிலைமை! இல்லையா?
தமிழன் உயிர் வாழும் கலையை மிக நன்றாகக் கற்றுத் தேறியவன். அதனால்தான் திருமணங்களின்போது ஒதிய மரப்போத்து ( முகூர்த்தக் கால்) ஒன்று வைத்து, கிருமிதாக்காமல் மஞ்சள் நீராட்டி, சடங்கு செய்து முடிந்ததும் ஏரிக்கரை போன்ற பொது இடத்தில் மணமகன் மரம் நடுவதும், மணமகள் நீர் வார்ப்பதுமான திருமணச் சடங்கு இன்னும் (சடங்காக மட்டும்) உயிர் புத்திசாலிகள் (!) முளைக்க முடியாத, காய்ந்து போன மூங்கில் போத்தை திருமண மண்டபங்களில் நிரந்தாரமாக வைத்து சடங்கு செய்வதோடு நிறத்திக் கொள்கிறார்கள்.
அதே நேரத்தில், இன்னும் கிராமங்களில், குழந்தைகள் இறந்து பட நேர்ந்தால், பொதுவான ஆற்றங்கரையில் புதைத்து, தொட்டில் கட்டித் தூக்கிச் சென்ற மரப் போத்தினை நட்டு வைத்து விட்டு (பாலூற்றி விட்டு) வரும் வழக்கம் தமிழன் பண்பாடாக, வாழ்வியல் முறையாக - நின்று நிலவி வருகிறது. துன்ப நிகழ்ச்சியாக இருந்தாலும் இன்ப நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் ''சமுதாயப் பணி''யை வைத்து, பண்பாட்டை வளர்த்து வாழ்ந்தவன் தமிழன். இந்தவித ''அறிவியல் அறிவு'' அவனுக்கு அந்தக் காலத்தில் எப்படி ஏற்பட்டது?
தமிழன் தனக்காக வாழாதவன். மற்றவர் நலனுக்காகச் சிந்தித்தவன். உலகத்தைப் பற்றிக் கவலைப்பட்டவன். உலகம் முழுவதும் பரவிய மனித உயிரின் தோற்றுவாய் தமிழ்நாடுதானே! மனித குலத்தின் நாற்றங்காலே தமிழ்நாடுதான். ஆகவே தமிழன் அனைவரையும் சகோதரனாகப் பார்க்கும் மனநிலையை வளர்த்துக் கொண்டவன். அதனால்தான் உலகப் பொதுமறையாகிய திருக்குறளில் ''உலகு'', ஞாலம்'' என்ற சொற்கள் மட்டும் 59 முறை ஒலிக்கப்பட்டிருக்கிறது. தமிழன் ஒவ்வொருவனும் ஒரு உலகக்குடிமகன். எல்லோரையும் சமத்துவமாக சகோதரதாக, உறவினராக ஏற்று, ''யாவரும் கேளிர்'' எனற இலக்கணத்தை வரையறுத்துக் கொண்டவன்.
3. இயற்கை எந்திரம்
இயற்கையான உயிர்க்காற்று உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டது போல, இயற்கையான நீர் ஆதாரப் பெருக்கத்திற்குத் துணை செய்து கொண்டது போல, இயற்கையான உணவு உற்பத்திக் கலையிலும் மூத்த முதல் மகனாக ஒளிருகிறான் தமிழன். அவன் கண்டுபிடித்துப் பயன்படுத்திய ''மரக்கலப்பை''யின் வடிவமைப்பை அந்நிய விஞ்ஞானிகள் கூடி விவாதித்துப் போற்றிப் புகழ்ந்துள்ள வரலாறு உண்டு.
நிலத்தின் மேற்பரப்பான 1/2 அடி மண்தான் வளமான உயிர்மண். இந்த ஆறு அங்குல மண்ணை கிளறிவிடுவதே நல்ல உழவு தமிழனின் கலப்பை அரை அடி ஆழத்திற்கு மேல் தோண்டாமல், உழவு செய்யும் முறையில் தொழில் நுட்பம் பொதிந்துள்ள எந்திரம். அதிலும் புஞ்சைப் பகுதிக்கு புஞ்சைக் கலப்பை. நிலத்திற்கேற்ற, காலதிற்கேற்ற, நீர்வசதிக்கேற்ற கலப்பைகளில் தான் எத்தனை வடிவமைப்புகள்!
மாட்டுச்சாணம் என்பதை கழிவுப் பொருளாகக் கருதவில்லை. அசிங்கத்தைக் தொடுவது போன்று அருவருப்படைந்து, சாணம் எடுத்துச் சேகரிப்பவரை கீழ்மைப் படுத்தவில்லை முன்னய தமிழன். சாணம் கொடுக்கும் கால் நடைகளை, ''விவசாயிகளின் செல்வம்'' என்று போற்றிப் புகழ்ந்தவன் தமிழன் மனிதனுக்கு வேண்டாத பொருளை உண்டு, மனிதனுக்கு வேண்டிய சாணமாக மாற்றிக் கொடுக்கும் ''இயற்கை எந்திரம்'' கால்நடைச் செல்வங்கள். எல்லாம் அறிந்திருந்த தமிழன் இன்று ஏதுமறியாத் தற்குறியாகக் கை பிசைந்து நிற்கிறானே, காரணம் என்ன?
4. தனி மனித பொறுப்புரிமை
இந்த நாட்டில் கலப்பையைக் கண்ணால் கூடப் பார்த்தறியாதவன் வேளாண் பட்டதாரி, மனப்பாடம் செய்த பாடத்தை அப்படியே தவறு இல்லாமல் ஒப்புவிக்கும் ஆற்றல் உள்ளவன் மட்டுமே திறமைசாலி. மருத்துவப் படிப்பிற்கும், பொறியியல் படிப்புக்கும் இடம் கிடைக்காமல்போன மாணவர்களுக்கு அடுத்த நிலையாகக் கிடைப்பது வேளாண்மைப்பட்டப் படிப்புக்கான இடம்.
அறியாமையும் வறுமையும் இரடடைப் பிறவிகள். ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்வன. ஆக, பொதுமக்களை அறிவாற்றலிலும், பொருளாதாரத்திலும் ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சாத்திரச் சட்டம். அதனால்தான் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உழைப்புப் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்து கொள்ள அவர்களுக்கு உரிமை இல்லை. நெல்வாங்க அரசாங்கம் இல்லை. உணவு உற்பத்திக்கு வேண்டிய அடிப்படையான நீர் கொடுப்பதில்லை. பண முதலாளிகளின் எந்தெந்த வாணிபத்திற்கோ மானியமும் இன்னபிறச் சலுகைகளும் கொடுத்திருக்கும். அரசாங்கம், விவசாயிகளின் உணவுப் பொருள் உற்பத்திக்கு ''உழைப்புக்கான ஊதிய மானியம் ''கொடுப்பதில்லை''.
விவசாயம் என்பது இயற்கை வாழ்வியலுக்கான ஒரு கருவி. இதன்மூலம் நாம் வளர்ச்சி நோக்கி முதல் அடி எடுத்து வைக்கிறோம். சிக்கனமான நீர்ப் பயன்பாடு. எந்தக் காலத்திலும், எங்கு நோக்கிலும் பச்சைப்பசேல் என்ற காட்சி. அதன் மூலம் உயிருள்ள உயிர்க்காற்று உற்பத்தி. அதாவது, நாம் ''இயற்கை சார்ந்த முழு மனித வாழ்வு'' வாழ வேண்டும். இது தான் நமது குறிக்கோள். இன்றைய நிலையில் (1) நஞ்சில்லா உயிர்க் காற்று (2) நஞ்சில்லா குடிநீர் (3) நஞ்சில்லா உணவு என்று இருக்க வேண்டுமேயல்லாது உணவு, உடை, உறையுள்தான் மனிதனின் அடிப்படைத் தேவை என்பதை மறந்துவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.
இஸ்ரேல் நாட்டில் 2-3 விழுக்காடு மக்கள் மட்டுமே வேளாண் தொழிலில் ஈடுபட்டு அனைவருக்கும் உணவு வழங்க முடியும்போது நம்மால் முடியாதா? சின்னஞ்சிறு நாடு. ஆனால் நம்மை விட 200 வருடம் முன்னால் இருக்கிறது.
காவிரி பொய்த்துப் போனபின் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிய புதுச்சேரி மாநிலத்தில் இன்றைய அரசு காவிரி நீருக்குச் சண்டையிட்டுக் கொண்டு காத்திருப்பதைவிட, வடகிழக்குப் பருவ மழைநீரை கடலில் கலக்க விடாமல் தேக்கி வைத்து பாதுகாத்து, நீர்வளத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்று திட்டமிட்டுச் செயல்படுத்தத் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்குத் தேவையானது வெறும் 10 டிஎம்சி நீர் மட்டுமே! அங்கு பெய்யும் மழையின் அளவோ 20 டிஎம்மசி. அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு. தம் நிலை உணர்ந்து, வளர்ச்சிப் பாதை நோக்கி அடி எடுத்து வைத்துவிட்டதைக் கண்ட பிறகாவது நமக்க உறைக்க வேண்டாமா? அவர்களால் முடியும்போது நம்மால் முடியாதா?
அவற்றுக்கான படிகள் இதோ....!
(1) ''இயற்கை வளம்'' (Natural Resources) காப்பாற்றப் பட வேண்டும், (மலை, காடு, காற்று) காக்கப்பட வேண்டும். மீண்டும் வளம் கூட்டப்பட வேண்டும். வளத்திற்கு வலிமை சேர்த்தாக வேண்டும்.
(2) ''இயற்கை விவசாயம்'' என்பது மண்ணை உயிருடன் வைத்திருக்க வேண்டும் என்பதே!
(3) உழவே இல்லாத சூழ்நிலை உருவாக்க வேண்டும். (காட்டில் மனிதனா மரம் வளர்க்கிறான்?) இயற்கையாக உழவு செய்யும் ''மண்புழு'' போதும். அதாவது நாம் நிலத்தில் வேலை செய்ய வேண்டியதில்லை. நமக்காக மண்புழு வேலை செய்யும்.
(4) என்ன விருப்பமோ - தேவையோ - அதனை விதைக்க வேண்டும். அறுவடை செய்து கொள்ள வேண்டும்.
(5) அதற்கேற்றாற்போல ''மண்ணை வளர்க்க'' வேண்டும்; பதப்படுத்தி பக்குவப்படுத்த வேண்டும் (Growing earth).
(6) இதற்கான முறையான ''வேளாண்மைத்திட்டம்'' இயற்றி, பொது மக்கள் புரிதலுக்காக அத்தனை ஊடகங்களிலும் பரப்புரை செய்ய வேண்டும்.
(7) மனித சமுதாயம் எத்தனை நச்சுசூழலில் சிக்கித்தவிக்கப் போகிறது என்பதை எடுத்துக்காட்டி, உடைக்க மறுக்கும் மக்கள் பெருக்கத்தை உழைக்க வைத்து, தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளச் செய்யும் ''தனிமனித பொறுப்புரிமை'' யைப் பெறச் செய்திட வேண்டும்.
இது அவ்வளவு எளிதானதா? இத்தனையையும் சாதிப்பது எப்படி? இன்றைய அழிவுச் சூழலிலிருந்து மனிதனை தப்புவிக்கச் செய்ய வேண்டுமே, எப்படி?
5. நீர்வளம் பெருக்க
நீர்வளம் பெருக்குதல் என்பது (1) பூமிப் பரப்புக்கு மேலே உள்ள மழை நீரை வீணாகக் கடலில் கலக்க விட்டு விடாமல் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி பாதுகாத்துக் கொள்வதாகும், இது விளைவித்த உணவுப் பொருளை களஞ்சியத்தில் இருப்பு வைத்து, அவ்வப்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்வது போன்றது. எப்போது மழைநீர் வீணாக்கப் படுகிறதோ, அப்போதெல்லாம் நம் உழைப்பில் விளைந்த உணவுப் பொருள், உணவாகப் பயன்படாமல் வீணே அழிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு வரவேண்டும். உணவுப் பொருளை விற்று வந்த பணம் கொள்ளை போய்விட்ட மன உளைச்சல் வரவேண்டும். தீவிபத்தில் கம்பு, கரும்பு, சோளம் எரிந்து போனதைப் பார்க்கும் பதைபதைப்பு வரவேண்டும். நம்குடும்பத்திற்கு வந்து சேர வேண்டிய சொத்துகள் கண்பார்வைக்கு முன்னால் கயவர்களால் சேதப்படுவதைக்கண்டு பொறுக்காத மன உணர்வு வரவேண்டும். மழைநீரும் மிகப்பெரிய சொத்து - செல்வம் என்பதை முதலில் தான் உணர்ந்து, மக்களையும் உணரச் செய்யும் அரசாங்கம் அமையப்பெறல் வேண்டும்.
ஆங்காங்கு தேக்கங்களில் நிறுத்தப்படும் மழைநீர், மண் வளத்திற்குப் பாதுகாப்பு; நிலத்தடி நீருக்கான மடைவாய். பூமி மேற்பரப்பில் நிறுத்தப்படும் நீர் ஒரு உடன்பயன்பாட்டிற்கான கைமேல் உள்ள இருப்பு (Readymade stock).
(2) பூமிப் பரப்புக்கு உள்ளே உள்ள நீர்நிலை (Reseerve Fund) அவசர கால உதவிக்கான கருவூலம். எப்போதுமே 4 ஆண்டுளுக்கு ஒரு முறை மழை பொய்த்து விடுவதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட அவசரகாலத் தேவைக்கு மட்டும் நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீர் சேகரிப்பு என்பதே ''நிலத்தடி நீர் சேகரிப்பு'' தானேயன்றி, மேற்பரப்பு, குளம், குட்டை, ஏரிகளில் சேகரிப்பதில்லை.
ஒரு காலத்தில் தீவிர சாகுபடித்திட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட ''பசுமைப் புரட்சி'' காலத்தில், ஏகப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் போடப்பட்டு, பூமியின் வயிற்றைப் புண்படுத்தி, ரத்தத்தைக் குடித்து விட்டோம். நீரை உறிஞ்சி எடுத்து ரத்தச் சோகையில் மெலியவிட்டு விட்டோம். மனிதன் வாய் கொப்பளிக்கக் கூட பூமியின் அடி வயிற்று நீர் தேவைப்பட்டது.
பூமியின் ரத்தம்தான் நிலத்தடி நீர். நிலத்தடி நீர் பொதுச் சொத்து. அதனைப் பயன்படுத்திக் கொள்ள தனிமனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறது? வங்கியில் பொதுவாக இருக்கும் பணத்தை அவரவர் விருப்பப்படி எடுத்துக் கொள்வது எவ்வளவு தவறோ, அவ்வளவு பெரிய தவறு நிலத்தடி நீரை உறிஞ்சுவது.
அதற்கு மாறாக, நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த பிறகு, மழைநீரைக் குழாய்களின் மூலம் பூமிக்குள் (Inject) செலுத்த வேண்டிய அவசர அவசிய நிலைக்கு வந்துவிட்டோம்.
அதாவது, ஓடும் நீரை நடக்க வைக்க வேண்டும். நடக்கும் நீரை நிறத்தி வைக்க வேண்டும். நிறுத்திவைக்கப்பட்ட நீர் பக்கவாட்டிலும் பூமிக்குள்ளும் கசிய விட வேண்டும். இது தான் நீர்ப் பாதுகாப்பு.
(3) இருக்கும் நீர் வளத்தை சிக்கனமாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும், அதற்காக, அதுவரை பழகிவந்த பழக்கத்தை மாற்றி அறிவியல் முறையில் பயிர்சாகுபடி செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இனி பருவ மழை என்பது எந்த ஆண்டும் பொழியப் போவதில்லை. இயற்கைச் சீற்றத்தினால் புயல் வரக்கூடிய காலத்தில் பெய்யும் மழையோடு சரி. அதுவும் பூமி குளிர்ந்து நீர்நிலை நிரம்பும் அளவுக்குப் பெய்யப்போவதில்லை. இதுதான் மழை என்ற 5 நிமிடம் அடையாளம் காட்டி விட்டுச் செல்வதோடு சரி. ஐயோ காலமே!
காவிரி டெல்டா பகுதியில் காலால் மடை திறந்த பழக்கம் இன்னும் நம்மை விட்டுப் போகவில்லை என்பதை மறுக்க முடியுமா? மாற்றிக் கொள்ள வேண்டாமா?
நாம் எத்தனை தூரம் கூட்டுறவு முயற்சியில், கூட்டாகச் சிந்தித்து நடவடிக்கை எடுத்து நம் மக்கள் சமுதாயத்தை காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம் என்ற சிந்தனை நம்மை திக்கு முக்காடித் திகைக்க வைக்கிறது.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயற்கை வளம் மீட்டிட... - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வேண்டும், நீர், என்பது, தான், இயற்கை, மக்கள், என்பதை, வேண்டிய, செய்து, உற்பத்தி, தமிழன், விட்டோம், காலத்தில், இல்லை, கொள்ள, என்ன, செய்யும், மனித, மட்டும், உயிர், காவிரி, இருக்க, அரசாங்கம், நாம், நீரை, இருக்கும், கொண்டு, நிலையில், மரம், மட்டுமே, எப்படி, எத்தனை, வைத்து, இயற்கையான, உணவுப், மரங்கள், தானே, அறிவியல், உள்ள, பகுதியில், நிலை, கொள்ளும், செய்ய, நிலத்தடி, இல்லாத, மனிதன், அதிக, காற்று, நெல், கால், அதாவது, முடியாது, என்பதே, பிறகு, இன்னும், காலம், சாணம், பொருள், அழித்து, கொடுத்து, அளவு, விட்டு, விவசாயிகள், வெறும், முறை, வந்து, விட்டது, தண்ணீர், இன்றைய, உயிர்க்காற்று, முடியும், கூடாது, மண்ணை, செலவு, தொகை, பூமியின், உண்டு, ஒன்று, முயற்சி, இடம், புரிந்து, உணவு, இடத்தில், கோடி, நோக்கி, ஆகவே, மேல், மாற்றி, மனிதனுக்கு, அழிப்பு, போதும், அந்த, நம்மை, சிறு, உயிர்க், செய்திட, ஆயிரக்கணக்கான, களைகள், பயன்படுத்திக், எடுத்துக், மூலம், வேர், காரணம், பொருளை, இல்லாமல், வரவேண்டும், விளைச்சல், பூச்சி, நாடு, பொய்த்துப், எடுத்து, உறிஞ்சி, மகசூல், பெரிய, விவசாயம், வளர்ந்து, வேண்டுமா, நீர்ப், காற்றில், அழிக்க, இருந்தால், இப்போது, இன்று, போகிறது, உலகில், தொழிற்சாலை, மற்ற, அல்லது, போனால், இருக்கின்றன, உயிரினங்கள், வெப்ப, முன், வேலை, அறிவு, எடுக்கும், மீண்டும், வைக்கோல், முடியாத, தாது, உழவு, தொழில், முளைக்கும், கலவை, அழிக்கப்படுகின்றன, நிலைமைக்கு, கருதி, சூரிய, செடி, ஒவ்வொரு, இத்தனை, பயிர்களையும், இனியும், தயாரித்துக், நிலம், கரைந்து, பயிர், நோய், உழைப்பு, கிருமிகளை, பகுதி, பால், அளவில், இழந்து, கூட்டுறவு, வாழ்ந்து, அவைகளை, விடுகிறது, விட்டான், வீரிய, முறைகளை, மருந்து, நஞ்சு, ரசாயன, மாறி, கொடுக்கும், தேவையான, பங்கு, விட்டால், விடும், கொலை, உயிர்கள், மழைநீர், நட்டு, வேளாண், அதனால்தான், வளர்த்து, பயன்படுத்தும், இருக்கிறது, பாதுகாத்து, நின்று, தமிழ், எதுவும், அவ்வளவுதான், இருந்த, வாழ்வியல், முழு, நாள், தேவை, முடிகிறதா, ஆக்சிஜன், நீர்நிலை, அமைத்தான், சடங்கு, சென்ற, தடுத்து, கொள்வது, நீர்வளம், மனிதனை, காடு, அத்தனை, விற்று, பெயரில், வளத்தை, கற்றுக், வைக்க, நிலைக்கு, பொதுவாக, கடலில், அரசு, எந்திரம், நிலத்தின், உலகம், அந்தக், வரும், விவசாயிகளின், உரிமை, முடியாதா, முன்னால், மனிதனின், நஞ்சில்லா, வாழ்வு, முடியுமா