வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 59
புருகூதன்
தேசம் : வட்சு நதிக்கரை (தாஜிக்ஸ்தான்)
ஜாதி : ஹிந்தோ ஈரானியர்
காலம் : கி.மு. 2500
கலகலவெனப் பேரிரைச்சலிட்டுக் கொண்டு வட்சு நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. நதியின் வலது பக்கம் உயர்ந்த மலையே அதன் கரையாக அமைந்திருந்தது. ஆனால் இடது பக்கம் மணற்பரப்பு விசாலமாய் இருக்கிறது. தூரத்தே நின்று நோக்கினால், அடர்ந்து வளர்ந்திருக்கும் தேவதாருக்களின் இருண்ட காட்சியைத் தவிர வேறு ஒன்றும் நமக்குத் தென்படாது. ஆனால், சமீபத்தில் சென்று பார்க்கும் போது அடி பெருத்து உயரத்தில் சிறுத்து நிற்கும் தேவதாருக்களின் கிளைகளும், அவற்றின் வேல் போன்ற இலைகளும் தனித் தனியாகக் காட்சியளிக்கும் வெயிற் காலத்தின் அந்திமம், ஆயினும் இன்னும் மழைக்காலம் ஆரம்பித்து விடவில்லை. வட இந்தியாவில் வசிப்பவர்கள், இந்த மாதத்தில் சூரிய வெப்பம் தாங்க முடியாமல் மிகவும் சிரமப்படுவார்கள்.
ஆனால் ஏழாயிரம் அடி உயரத்திலிருக்கும் இந்த மலைப் பிரதேசத்தில், வெப்பத்தைப் பற்றிய சிந்தனையே கிடையாது!
வட்சுநதியின் இடது கரையில் ஒரு வாலிபன் நடந்து செல்கிறான். அவனுடைய மார்பை, ஒரு கம்பளத்துணி மூடியிருந்தது. இடையை நீண்ட கம்பளத் துணியால் பட்டி போல் சுற்றிக் கட்டியிருந்தான். கீழே ஒரு கம்பள உடை, பாதத்தில் மிதியடி; இடுப்பில் தாமிரத்தினால் செய்யப்பட்ட நீண்டவாள் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. தலைமீதிருந்த தொப்பியை எடுத்து இடது தோளில் தொங்கும் பிரம்புக் கூடையில் வைத்துக் கொண்டான். அந்த மெல்லிய பிரம்பால் செய்த கூடையில் அவனுக்குத் தேவையான அநேக சாமான்கள் இருந்தன. அவனுடைய மற்றொரு தோளிலே வில்லும், அம்பறாத் தூணியும் தொங்கிக் கொண்டிருந்தன. கையிலே ஒரு நீண்ட மூங்கில் தடி, காற்றிலே அசைந்தாடும் அவனது மிருதுவான பொன்னிறக் கேசங்கள் முதுகிலே விழுந்து புரண்டன.
மலை ஏற்றம் கடுமையாக இருந்தது. அங்கங்கே சிறிது நின்று களைப்பாறிச் செல்கிறான். அவனுக்கு முன்னால் ஆறு கொழுத்த ஆடுகள் நடக்கின்றன. அவைகளின் மேல் குதிரை ரோமங்களால் செய்யப்பட்ட மாவு நிரம்பி பெரிய பெரிய பைகளை ஏற்றியிருந்தான். சிவப்பு நிற நாயொன்று இந்த
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 57 | 58 | 59 | 60 | 61 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்த, இடது, ஆனால் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்