முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 212
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 212
சுபர்ணயௌதேயன்
காலம் : கி.பி. 420
என்னுடைய விதிதான் எப்படிப்பட்டது? என்னை ஒரு பொழுதும் ஓர் இடத்தில் நிலைத்திருக்க விடுவதில்லை. அடிபட்ட பந்துபோல் அங்குமிங்கும் அலைந்து கொண்டும் கவலையிலே மூழ்கியிருக்கும்படியும் செய்துவிட்டது.
என்னுடைய வாழ்நாளிலே கசப்பான நாட்கள்தான் அதிகம் என்றாலும், ஒரு சில இன்ப நாட்களும் வந்தன. மழைக் காலத்தின் கடைசி நாள்களிலே ஓர் இடத்தில் மழை பொழியும் பொழுதே அதற்குச் சிறிது தூரத்தில் வெயிலெரிப் பதுபோல் இத்தேசத்தின் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மாற்றச் சக்கரம் ஏன் ஓயாது சுழன்று கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. மேற்குப் பிரதேசமான பாஞ்சாலத்திலே, இன்றுகூட கன்று மாமிசம் உணவாகக் கொள்ளப்படு கிறது. ஆனால், மத்தியப் பிரதேசத்தில் (ஐக்கிய மாகாணம், பீஹார்) பசுமாமிசத்தின் பெயரைச் சொல்வது பாவம். அங்கே பசுப் பாதுகாப்பு பிராமணர்களின் சிறந்த தர்மமாகக் கருதப்படுகிறது. இந்த மதக் கருத்திலே வெயிலுக்கும் நிழலுக்கும் உள்ளதைப் போன்ற இவ்வளவு பெரிய வேற்றுமை இருக்கக் காரணம் என்ன? ஓர் இடத்திலே தருமமாகக் கருதப்படுவது, மற்றோர் இடத்திலே ஏன் அதர்மமாகக் கருதப்படுகிறது? இல்லை; ஒரு இடத்திலே மாற்றம் முந்தி வந்துவிட்டது. அடுத்த இடமும் சிறிது காலம் தாழ்த்தி அதைப் பின்பற்றும். இதில் தர்மம்- தர்மம் ஏதும் இல்லை.
நான் அவந்தி (மாளவம்) நாட்டின் ஷிப்ரா நதிக்கரையில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தேன். எனது முன்னோர்கள் தங்களை நாடோடிகள் என்று கருதினார்கள் என்றாலும் அவர்களுக்குச் சொந்த நிலமும் சொந்த வீடும் இருந்தன. அவைகளை அவர்கள் தோளிலே தூக்கிக் கொண்டு அலைய முடியாது. எனது முன்னோர்களின் ஆஜானுபாகுவான தோற்றமும் நிறமும்
கிராமத்தின் மற்ற ஜனங்களிலிருந்து அவர்களைப் பிரித்துக் காட்டியது. கிராமத்தின் மற்ற ஜனங்களைவிட அவர்கள் அதிக வெண்மையாய் இருந்தார்கள். என் தாய் அந்தக் கிராமத்திலே ஈடிணையற்ற அழகி. அவளுடைய வெண்மையான முகத்திலே கரிய கூந்தல் வந்து படியும் பொழுது மிக அழகாக இருக்கும். எங்கள் முன்னோர்கள் தங்களைப் பிராமணர்கள் என்றே சொல்லிக் கொண்டார்கள். ஆனால் கிராமத்தின் மற்ற ஜனங்கள் அதை நம்பவில்லையென்றே எனக்குத் தோன்றிற்று. சந்தேகத்திற்குக் காரணமும் இருந்தது. கிராமத்தின் மற்ற பிராமணர்கள், மது அருந்துவதை மகாபாவம் என்று கருதினார்கள். ஆனால்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 210 | 211 | 212 | 213 | 214 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மற்ற, கிராமத்தின், இடத்திலே, ஆனால் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்