சத்ய சோதனை - பக்கம் 484
அநேகர். ஆனால், இம்முறையை ஒழிப்பதற்குச் சத்தியாக் கிரகத்தை ஆரம்பிப்பது என்ற உறுதியே அது சீக்கிரத்தில் ஒழியும் படி செய்துவிட்டது என்பதை நான் சொல்லாமல் இருப்பதற்கில்லை.
இக்கிளர்ச்சியைப் பற்றிய விவரங்களையும் அதில் யார் பங்கு எடுத்துக் கொண்டார்கள் என்பதுபற்றியும் அறிவதற்கு நான் எழுதிய தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம் என்ற நூலை வாசகர்கள் படிக்கவும்.
12 அவுரிச் சாகுபடி அநீதி |
ஜனக மகாராஜன் ஆண்ட நாடு, சம்பாரண். அங்கே மாந்தோப்புக்கள் ஏராளமாக இருப்பதைப் போலவே, 1917ஆம் ஆண்டு வரையில், அவுரித் தோட்டங்களும் நிறைய இருந்து வந்தன. சம்பாரண் குடியானவர் ஒவ்வொருவரும், தாம் சாகுபடி செய்யும் நிலத்தின் இருபதில் மூன்று பாகத்தில் தமது நிலச்சுவான்தாருக்காக அவுரியைக் கட்டாயம் பயிர் செய்தாக வேண்டும் என்று சட்டம் இருந்தது. இதற்கு ‘தீன் கதியா’ முறை என்று பெயர். இருபது ‘கதியா’க்கள் கொண்டது ஒரு ஏக்கர். அதில் மூன்று ‘கதியா’வில் அவுரிச் சாகுபடி செய்யவேண்டும் என்று இருந்ததால் அம்முறைக்குத் ‘தீன் கதியா’ என்று பெயர்.
சம்பாரண் இருக்கும் இடம் மாத்திரம் அல்ல, அப்பெயர் கூட, எனக்கு அப்பொழுது தெரியாது என்பதை நான் ஒப்புக் கொள்ளவே வேண்டும். அவுரித் தோட்டங்களைப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. அவுரிப் பொட்டணங்களைப் பார்த்திருக்கிறேன் ஆனால், சம்பாரணில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பெருந்துன்பங்களை விளைவித்து அவுரியைப் பயிரிட்டுத் தயாரிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.
இத்துன்பங்களை அனுபவித்து வந்த விவசாயிகளில் ஒருவர் ராஜ்குமார் சுக்லா. தம்மைப்போல மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அனுபவித்து வரும் அநீதியை எப்படியும் போக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர் அவர்.
1916-ஆம் ஆண்டில் காங்கிரஸ் மகாநாட்டிற்கு நான் லட்சுமணபுரி போயிருந்தபோது அவர் என்னைப் பிடித்துக் கொண்டார். “எங்கள் துயரங்களைப்பற்றிய விவரங்களையெல்லாம் வக்கீல் பாபு உங்களுக்குக் கூறுவார்” என்று அவர் சொன்னார். சம்பாரணுக்கு வருமாறும் என்னை வற்புறுத்தினார். “வக்கீல் பாபு’ என்று அவர் சொன்னது, பாபு பிரஜ்கிஷோர் பிரசாத்தையே. அவர் சம்பாரணில் எனக்கு மிகச் சிறந்த சக ஊழியரானார். பீகாரில் பொதுஜன சேவைக்கு உயிராகவும் அவர் இருந்தார். ராஜ்குமார் சுக்லா, அவரை என் கூடாரத்திற்கு அழைத்து வந்தார். அவர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 482 | 483 | 484 | 485 | 486 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவர், என்று, நான், எனக்கு, தெரியாது, வேண்டும், சாகுபடி, சம்பாரண், என்ற - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்