சத்ய சோதனை - பக்கம் 203
தீர்மானித்தேன். அலகாபாத்திலிருந்து பிரசுரமாகும் ‘பயோனீர்’ பத்திரிகையைக் குறித்து நான் அதிகமாகக் கேள்விப்பட்டிருந்தேன். இந்தியரின் தேசியக் கோரிக்கைகளை எதிர்க்கும் பத்திரிகை அது என்றும் அறிந்து கொண்டிருந்தேன். அச்சமயம் ஸ்ரீ செஸ்னே (இளையவர்) அதன் ஆசிரியராக இருந்தார் என்று எனக்கு ஞாபகம். எல்லாக் கட்சியினரின் ஆதரவையும் பெற நான் விரும்பினேன். ஆகவே, ஸ்ரீ செஸ்னேக்கு ஒரு குறிப்பு அனுப்பினேன். அதில், எனக்கு ரெயில் தவறிவிட்ட விவரத்தைக் கூறினேன். மறுநாள் வண்டிக்கு நான் புறப்படுவதற்கு முடியும் வகையில் சந்தித்து பேச என்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அதில் கோரினேன். சந்தித்துப் பேச உடனே அனுமதித்தார். மகிழ்ந்தேன். முக்கியமாக நான் கூறியதையெல்லாம் அவர் பொறுமையாகக் கேட்டுக் கொண்டதைக் குறித்து, நான் அதிக சந்தோஷம் அடைந்தேன். நான் என்ன எழுதினாலும் அதைக் குறித்துத் தம் பத்திரிகையில் அபிப்பிராயம் எழுதுவதாகவும் கூறினார். அதோடு இன்னும் ஒன்றும் கூறினார். ஆப்பிரிக்காவில் குடியேறி இருக்கும் வெள்ளைக்காரர்களின் கருத்தையும் அறிந்து, அதற்குரிய மதிப்பையும் கொடுக்கத் தாம் கடமைப்பட்டிருப்பதால் இந்தியரின் கோரிக்கைகள் எல்லாவற்றையும் ஆதரிப்பதாகத் தாம் வாக்களிக்க முடியாது என்றார்.
“இப் பிரச்னையை நீங்கள் கவனித்து, அதைக் குறித்துப் பத்திரிகையில் விவாதிப்பதே போதும். நான் கேட்பதும், அடைய விரும்புவதும் எங்களுக்கு உரிய நியாயமான உரிமைகளை மாத்திரமே அன்றி வேறு எதையும் அல்ல” என்றேன்.
அன்றைய மீதிப் பொழுதை, ஊரைச்சுற்றிப் பார்ப்பதிலும், திரிவேணி சங்கமத்தின் அற்புதக் காட்சியைக் கண்டு ஆனந்திப்பதிலும் கழித்தேன். என்னுடைய வேலைத் திட்டத்தைக் குறித்தும் சிந்தித்தேன்.
எதிர்பாராத விதமாக நான் ‘பயோனீர்’ ஆசிரியரைச் சந்தித்துப் பேசியது, தொடர்ந்து நடந்த பல சம்பவங்களுக்கு அடிப்படை ஆயிற்று. இறுதியில் என்னை நேட்டாலில் அடித்துக் கொல்ல முயன்றதில் போய் இது முடிந்தது.
பம்பாயில் தங்காமல் நேரே ராஜ்கோட்டிற்குச் சென்றேன். அங்கே தென்னாப்பிரிக்க இந்தியர் நிலைமையைக் குறித்து, ஒரு துண்டுப் பிரசுரத்தை எழுதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன். அதை எழுதவும் அச்சிடவும் ஒரு மாதம் ஆயிற்று. அதற்குப் பச்சை நிற மேல் அட்டை போடப்பட்டது. ஆகவே அது ‘பச்சைத் துண்டுப் பிரசுரம்’ என்று வழங்கலாயிற்று. அதில், தென்னாப்பிரிக்க இந்தியரின் நிலையைக் குறித்து, வேண்டுமென்றே, அடக்கமாக, குறைத்தே கூறியிருந்தேன். முன்னால் நான் இரு
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 201 | 202 | 203 | 204 | 205 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், குறித்து, அதில், இந்தியரின் - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்