சத்ய சோதனை - பக்கம் 154
சரியானபடி ஒருவர் உடையணிந்திருக்கிறார் என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் ஸ்டேஷன் மாஸ்டரிடமே இருப்பதால் அந்தப் பதில் இந்தியருக்குப் போதுமான கஷ்ட நிவாரணம் அளிப்பதாக இல்லை.
இந்தியர் சம்பந்தமான சில தஸ்தாவேஜு களைப் பிரிட்டிஷ் ஏஜண்டு எனக்குக் காட்டினார். இதேபோன்ற தஸ்தாவே ஜு களைத் தயாப் சேத்தும் எனக்குக் கொடுத்திருந்தார். ஆரஞ்ச் பிரீ ஸ்டேட்டிலிருந்த இந்தியர் எவ்வளவு கொடூரமாக விரட்டியடிக்கப்படுகிறார்கள் என்பதை அவைகளைக் கொண்டு அறிந்துகொண்டேன்.
சுருங்கச் சொன்னால், டிரான்ஸ்வாலிலும், ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டிலும் இருக்கும் இந்தியரின் சமூக, பொருளாதார, ராஜீய நிலையைக் குறித்து நன்றாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளுவதற்கு நான் பிரிட்டோரியாவில் இருந்தது வசதியளித்தது எனலாம். இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் எனக்கு மதிப்பதற்கரிய உதவியாக இருக்கப்போகிறது என்பது அப்பொழுது எனக்குத் தெரியாது. ஆண்டு முடிவிலோ, ஆண்டு முடிவதற்கு முன்னாலேயோ, வழக்கு முடிந்துவிட்டால் அதற்கும் முன்பே, நான் இந்தியாவுக்குத் திரும்பி விடலாம் என்றே நினைத்து வந்தேன். ஆனால், கடவுளின் சித்தமோ வேறுவிதமாக இருந்துவிட்டது.
13. கூலியாக இருப்பதன் துன்பம் |
டிரான்ஸ்வாலிலும் ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டிலும் இருந்த இந்தியரின் நிலைமையைக் குறித்து விபரமாகக் கூறுவதற்கு இது இடமன்று. அதைக் குறித்து விபரமாக அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நான் எழுதியிருக்கும் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகத்தின் சரித்திரம் என்ற நூலில் பார்க்குமாறு யோசனை கூறுகின்றேன். என்றாலும் அதைக் குறித்து இங்கே சுருக்கமாகக் கூற வேண்டியது அவசியம்.
ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டில், 1858ல் செய்யப்பட்ட விசேஷ சட்டத்தின் படி,இந்தியருக்கு முன்னால் இருந்த உரிமைகள் எல்லாமே பறிக்கப்பட்டு விட்டன. அங்கே இந்தியர் இருக்க விரும்பினால் ஹோட்டல்களில் வேலைக்காரர்களாக மாத்திரமே இருந்து வர முடியும். இல்லாவிடில் இதுபோன்ற கீழ்த்தரமான ஊழியம் செய்துகொண்டிருக்க வேண்டும். சொற்ப நஷ்ட ஈடு கொடுத்து, வியாபாரிகள் விரட்டப்பட்டு விட்டனர். விண்ணப்பங்களும் மகஜர்களும் அனுப்பினார்கள்; ஒன்றும் பயனில்லை.
டிரான்ஸ்வாலில் 1885இல் கடுமையான சட்டம் ஒன்றை இயற்றினர். 1886-இல் இச்சட்டத்தில் சிறுமாறுதல்களைச்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 152 | 153 | 154 | 155 | 156 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறித்து, பிரீ, நான், ஆரஞ்சு, இந்தியர் - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்