முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » ஈசாப் நீதிக் கதைகள் » கழுதையும், மனிதக் குரங்கும், துன்னெலியும்
ஈசாப் நீதிக் கதைகள் - கழுதையும், மனிதக் குரங்கும், துன்னெலியும்

ஒரு நாள் கழுதையும் மனிதக் குரங்கும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தன. இரண்டும் தங்கள் உருவம் பற்றி புலம்ப ஆரம்பித்தன.
"எனக்கு காது ரொம்பவும் பெரிதாக இருப்பதால் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்" என்று வருந்தியது கழுதை. "மாட்டுக்கு இருப்பது போல எனக்கும் கொம்புகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றது அது.
"எனக்கு மட்டும் என்ன, என் பின் பக்கத்தை. யாரிடமும் காட்டவே வெட்கமாக இருக்கிறது. நரியைப் போல எனக்கும் அழகிய ரோமங்களுடன் வால் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றது மனிதக் குரங்கு.
"கிடைத்ததை வைத்து சந்தோஷப்படுங்கள்" என்றபடி அங்கு வந்தது துன்னெலி.
"எங்களுக்கு வாலும் கிடையாது. கொம்பும் கிடையாது. கிட்டத்தட்ட பார்வையும் கிடையாது. நாங்கள் சந்தோஷமாகத்தானே இருக்கிறோம்" என்றது அந்த துன்னெலி.
நீதி: மற்ற சிலரைவிட நாம் நன்றாக இருக்கும்போது, இல்லாததை நினைத்து வருந்தக்கூடாது.
துன்னெலி: ஆங்கிலத்தில் Mole என்று அழைக்கப்படும் துன்னெலிகள், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் சில பகுதிகளில் காணப்படும் எலிகளைப் போன்ற சிறிய விலங்கு. பார்வை மிகக் குறைவாக இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கழுதையும், மனிதக் குரங்கும், துன்னெலியும் - ஈசாப் நீதிக் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - ", கிடையாது, துன்னெலி, என்றது, நன்றாக