புத்தி ரேகை - கைரேகை சாஸ்திர ரேகைகள்
குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு அல்லது சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை ஆகும். இது ஓரளவு அழுத் தமாகவும், தெளிவாக வும், மெல்லியதாக வும் இருந்து தீவு, புள்ளி, உடைதல், போ ன்ற குறைபாடு கள் இல்லாது அமைந்தால் இவர்கள் புத்திசாலியாகவும் , அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும், நேர்மையாக வும் இருப்பர். புத்தி ரேகை நீளமாக அமை ந்திருந்தால், இன்னும் விசேஷ மான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும், அது வேலை செய்யும் திறனையும், நமது மனோ நிலை யையும் எடுத்துக் காட்டுகிறது..!
புத்திரேகையானது ஆயுள் ரேகையுடன் இணைந்து உற்பத்தியாகாமல் அல்லது ஆயுள் ரேகையுடன் ரேகை இணைப்பு எதுவு மில்லாமல் தனித்து ஆயுள், இருதய ரேகைகளுக்கு மத்தியில் உற்பத்தியாகும் புத்திரேகை, அவ்விதம் ரேகை அமைந்தவன் புத்தியின் பலத்தையும் சுதந்திரப் போக்கையும் தன்னிச்சையான பிடிவாத குணத்தையும் காட்டும்.
ஆயுள் ரேகையோடு புத்திரேகையானது இணைந்து உற்பத்தியாகி இருந் தால் தாய், தந்தை, மனைவி, பிள்ளை, குடும்பமென்று பிரிக்க முடியாத பாசப்பிணைப்பு இருக்கும்.
ஆயுள் ரேகையுடன் இணைந்த உற்பத்தியாகாத புத்தி ரேகையைக் கொண்டவர் எப்போதும் தனித்து நிற்பதில், தனித்து வாழ்வதில் பிரியம் காட்டுவார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புத்தி ரேகை - கைரேகை சாஸ்திர ரேகைகள் - Palm Lines - கைரேகை - Palmistry - Astrology - ஜோதிடம்