விதி ரேகை - கைரேகை சாஸ்திர ரேகைகள்
உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச் செல்லும். இதுவே விதி ரேகை அல்லது தொழில் ரேகை ஆகும். இது நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது. சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது..! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் பாடுபட்டாலும், பலன் கிடைக்காது. விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறி, தீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்லது. இவர்கள் வாழ் நாள் முழுவதும் தொழில் விஷயத்தில் பிரச்சனை ஏதும் இல்லாது நிம்மதியாக வாழ்வர். விதி ரேகையுடன் ஆயுள், புத்தி, இருதய ரேகைகளும் நன்றாக அமைந் திருந்தால், இவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும் , புத்திசாலித் தனமும் , நல்ல தொழில் விருத்தியும் ஏற்பட இடமுண்டு. இவர்களது எதிர்காலம் சந்தோசமாக அமையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விதி ரேகை - கைரேகை சாஸ்திர ரேகைகள் - Palm Lines - கைரேகை - Palmistry - Astrology - ஜோதிடம்