இராசி காரத்துவங்கள் - நாடி ஜோதிட விதிகள்
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருப்பதுபோலவே, ஒவ்வொரு இராசிக்கும் சில சில தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கின்றன. இவற்றை அந்த இராசிக்குரிய காரகங்கள் என்று சோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள். எந்த இராசிக்கு என்னென்ன காரகங்கள் என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்:
முட்செடிகள், மலை, சிறு காடு, போர்க்களம், நெருப்புள்ள பகுதி, கள்ளர்கள் வாழும் பகுதி, பகலில் காடு, இரவில் ஊர் அதிகவாசி, சிவப்பு நிறம், அரசு, தலைப்பாகம், இராணுவம், தீயணைப்புத் துறை, தொழிற்சாலை, விவசாயம்.
ரிஷபம்:
மாட்டுத் தொழுவம், பழங்கள், வெண்மை நிறம், உணவுத் தானியங்கள், முகம், வயல்வெளி, தச்சுப்பட்டறை, பெண், வெள்ளி, இரத்தினக் கற்கள், வியாபாரம், வட்டித் தொழில், கால்நடை வளர்ப்பு, கலைப் பொருட்கள், வாசனைப்பொருட்கள், திரைப்படம், கவிதை, பாட்டு, தங்கும் விடுதி.
மிதுனம்:
வியாபார ஸ்தலம், பெரிய மண்டபம், சூதாட்ட ஸ்தலம், நகரங்கள், கடலுக்கு அண்மைய இடம், பாடசாலை புத்தகப்பை வைக்கும் இடம், செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை, விண்வெளித்துறை, கல்வித்துறை, நிதித்துறை, சோதிடம், வியாபாரம், எழுத்துத்துறை, மேடைப்பேச்சு.
கடகம்:
நீர்நிலை, ஆறு, குளம், குளியல் அறை, வயல் சார்ந்த இடம், முத்து, சங்கு, திரவப் பொருட்கள், ஏற்றுமதி, இறக்குமதி வேளாண்மைத் தொழில், சோதிடம், மருத்துவம், போக்குவரத்துத் துறை, கல்வித்துறை, கலைத்துறை, பால் விற்பனைத் தலம், தெய்வஸ்தலம், இளஞ்சிவப்பு நிறம்.
சிம்மம்:
அரண்மனை, அலுவலகம், குகை, உயரமான பகுதி, விலங்குகள் வசிக்கும் இடம், மாநில அரசு, வயிறு, அரசு உத்தியோகம், அரசியல் நிர்வாகப் பொறுப்பு, இரும்பு மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில், பொறியியல் துறை, அறுவை சிகிச்சை மருத்துவர், சமூக சேவை செய்தல், தர்ம ஸ்தாபனம் நடத்துதல்.
கன்னி:
புத்திசாலித்தனம், கூர்மையான அறிவு, பெரிய வியாபார ஸ்தலம், படரும் கொடிகள், கல்விச் சாலை, சாம்பல் நிறம், இடுப்பு, பூந்தோட்டம், நகரம், கணக்கர், தணிக்கையாளர், பலவித வியாபாரம், ஆசிரியர், எழுத்தர், மளிகைக்கடை, தானிய சேமிப்புக் கிடங்கு.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசி காரத்துவங்கள் - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்