12 இலக்கினப் பொதுப் பலன்கள் - தனுசு உங்கள் இலக்கினம்
நீங்கள் தனுர் லக்னத்தில் பிறந்தவர். ராசி அமண்டலத்தில் அது 9 - வது
ஸ்தானத்தில் உள்ளது அதன் அதிபதி குரு. நீங்கள் ஒரு நல்ல குணவான் உங்களுக்கு அழகிய பல்வரிசை உள்ளது நீங்கள் மிகவும் செல்வச்செழிப்பு படைத்தவர் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். நீங்கள் நன்கு படித்தவர் அறிவாளி விவேகமிக்கவர். நீங்கள், உங்கள் தொழிலில் பலராலும், விரும்பி நேசிக்கப்படுகிறீர்கள். நீங்கள் அயல் நாடுகளுக்குப் பயணம் செல்வீர்கள். நீங்கள் படித்தவர்களையும், பெரியோர்களையும், மதித்து மரியாதை செலுத்துவீர்கள். சுறுசுறுப்பான உங்களுக்கு ஒருசில குழந்தைகளே இருக்கும். உங்கள் குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவித்திருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையின் பின் பகுதியில், நீங்கள் செல்வச் செழிப்பையும், நன் மதிப்பையும் சிறப்பையும் பெறுவீர்கள். 22 வயதுக்குப் பின்னர், நீங்கள் நன்கு முன்னேறுவீர்கள். நீங்கள் நீண்ட முகத்துடன், மிகுந்த அழகிய தோற்றத்துடன் விளங்குவீர்கள். உங்கள் முன்தலை, பிரதானமாகத் தெரியும். உங்களுக்கு பளிச்சென்று ஒளிவிடும் கண்கள் உள்ளன. நீங்கள் தாராள சிந்தை கொண்டவர். நீங்கள் மிக சுறுசுறுப்பானவர் துணிச்சல்மிக்கவர். விளையாட்டுப்போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, நீங்கள் விரும்புகிறீர்கள். புகழும் சிறப்பும் அடைவதற்கு நீங்கள், எப்போதுமே பேராவல் கொண்டவர். நீங்கள், அதிகம் உயரமாக இருக்கமாட்டீர்கள் நல்ல கவர்ச்சியான குரல் வளம் கொண்டிருப்பீர்கள். உங்கள் சுய நலனுக்கு, நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருபவர். நீங்கள் சமய ஈடுபாடு உடையவர் பொது ஸ்தாபனங்களுக்கு நீங்கள் தலைவராக இருக்கலாம். வேதாந்தத்திலும், மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும், உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது. கவர்ச்சியான தோற்றமுடைய நீங்கள், எப்போதுமே சிரித்த முகத்துடன், பகட்டு எதுவுமின்றி இருப்பவர் உண்மையை விரும்புபவர் இளகிய, கனிவுமனம் படைத்தவர். மிகவும் சுயேச்சையான கருத்துக்களைக் கொண்டவர். எந்த ஒரு விஷயத்தையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் நீங்கள் மிகவும் திறமைசாலி பல விஷயங்களைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்ளவல்ல நீங்கள், கடவுளிடம் பக்தியுடையவர் நன்கு உழைக்கக்கூடிய நீங்கள், சோம்பேறியாக, எந்த வேலையுமே செய்யாமல் சும்மா இருத்தலை விரும்புவதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனுசு உங்கள் இலக்கினம் - Common Profit of Lagna's - 12 இலக்கினப் பொதுப் பலன்கள் - Astrology - ஜோதிடம் - நீங்கள், உங்கள், உங்களுக்கு, கொண்டவர், மிகுந்த, மிகவும்