12 இலக்கினப் பொதுப் பலன்கள் - கன்னி உங்கள் இலக்கினம்
நீங்கள் கன்னியா லக்னத்தில் பிறந்தவர். ராசிமண்டலத்தில் ஆறாவது இடத்தில்
இருப்பது கன்யாராசி. உங்களுக்கு உருண்டையான முகமும், நன்கு வடித்தெடுத்தாற்போன்ற உடற்கட்டும் அமைந்திருக்கும். சிவந்த மேனியும், கறுமையான கண்களும் கேசமும் கொண்டிருக்கும் நீங்கள், மிகவும் சுறுசுறுப்பானவர் லட்சியப் பேரவா கொண்டவர். படிப்பதிலும், பலவற்றைக் கற்பதிலும், உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல தகுதியும் திறமையும், உங்களுக்கு இருக்கும். நீங்கள் மென்மையாகப் பேசுபவர் அதிகம் பேசாதவர். கவர்ச்சியான கண்களைக் கொண்டவர். உங்கள் மனைவி/கணவனிடம், நீங்கள் மிகுந்த ஆசையும் ஈடுபாடும் கொண்டவர். உங்கள் சகோதரர்களிடமிருந்து, உங்களுக்கு சில எதிர்ப்புக்கள் வரலாம். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் நீங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர். உங்களுக்கு பல புதல்விகள் இருப்பார்கள். சமயப் பணிகளில் நீங்கள் ஆர்வம் கொண்டிருப்பீர்கள் பல அயல் நாடுகளுக்கும் சென்று வருவீர்கள். மன உறுதியும் ஆழ்ந்த உள்ளத்து உணர்வுகளும் உங்களுக்கு உண்டு. உங்கள் குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிக மகிழ்ச்சியானவராக இருந்திருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், பல தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். 32 - லிருந்து 36 - வயது வரையான காலத்தில், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதுடன், நல்ல பெயரும் புகழும், மதிப்பும் பெற்று விளங்குவீர்கள். சில நேரங்களில், உங்களுடைய விவரமான விளக்கங்கள் காரணமாய் நீங்கள் மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திடலாம். உங்கள் செயல்களில், நீங்கள் சுறுசுறுப்புடனும் விரைவாகவும் இயங்குவீர்கள். படித்து அறிவைப் பெருக்கிக் கொள்வதில், உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கிறது. உங்கள் மனதில் இருப்பதையெல்லாம், நீங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை மனம் திறந்து பேசுவதுமில்லை
தேடல் தொடர்பான தகவல்கள்:
கன்னி உங்கள் இலக்கினம் - Common Profit of Lagna's - 12 இலக்கினப் பொதுப் பலன்கள் - Astrology - ஜோதிடம் - நீங்கள், உங்கள், உங்களுக்கு, மிகுந்த, கொண்டவர்