9. ஆயில்யம் - நட்சத்திர ஆருடம்
9. ஆயில்யம் வந்ததால்..
உண்டாகு மாயில்ய முதித்ததாலே உன்மனதில் நினைப்பதெல்லாம் தடங்கலாகும் சண்டைவரும் தெண்டமுண்டு பொருளுனக்கு சஞ்சலத்தால் மனஞ்சலிக்கும் இடத்தைமாற்றும் பெண்டுபிள்ளை தனைபிரிவாய் பிணியுண்டாகும் பேசினாலுன்வாக்கு விஷம்போல் தோன்றும் கொண்டயெண்ணம் பகல்கனவாய் மாறுமப்பா கொடுமையது விலகதுதி நவக்கிரகத்தை |
பொருள்: மனத்தில் நினைத்த எண்ணம் தடங்கலாகும். குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பகை ஏற்படும். பலவிதத்தில் பொருள் சேதம் உண்டு. சலிப்பு ஏற்படும். அதனால் இடத்தை விட்டும் மாற்றும். மனைவி- மக்களையும் பிரிய நேரிடும். சொற்பமான நோயாயினும் பெரிதும் பாதிக்கும். உனது வாக்கு பிறருக்கு விஷம் போல் தெரியும். எண்ணங்கள் எல்லாம் பகற் கனவாக மாறும். ஒரு மாதம் கழித்து நன்மை உண்டாகும். இது மத்திமப் பலன்..
தேடல் தொடர்பான தகவல்கள்:
9. ஆயில்யம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்