ஜோதிடம் குறிப்புகள் - ஜோதிட குறிப்புகள்!

கேந்திரம்: இலக்கினத்தில் இருந்து 1, 4, 7, 10 ம் வீடுகள்
திரிகோணம்: இலக்கினத்தில் இருந்து 5, 9 ம் வீடுகள்
வர்கோத்தமம்: ஒரு கிரகம் இராசியிலும் அம்சத்திலும் ஒரே இராசியில் காணப்படுதல் வர்கோத்தமம் எனப்படும்.
வக்கிரம்: ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் என அளைக்கப்படும்.
சைடீரியல் ரைம்: குறிப்பிட்ட நட்சத்திரத்தைக் கொண்டு காலத்தை கணக்கிடுவது. மேஷம் "0" பாகைக்கு பூமி சரியாக 360 டிகிரி சுற்ற எடுக்கும் கால அளவு சைடீரியல் ரைம் என அளைக்கப்படும்.
கிறீன்விச் நேரம்: கிறீவிச்சை மையமாகக் கொண்டு கணிக்கப்படுவது.time zone (greenwich east or west )
இந்தியன் ஸ்டாண்டற் மணி: கிறீன்வீச்சுக்கு 82-30 டிக்கிரிக்கு 5 மணி 30 நிமிட வித்தியாசத்தில் உள்ளது.
சுதேச மணி: தீர்க்க ரேகை 82-30 டிகிரிக்குக் கிழகு அல்லது மேந்கில் இருக்கும் ஊர்களின் மணியாகும். இந்தியா முழுவதும் ஸ்டாண்டட் மணிதான் உபயோகம். ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் கழித்தோ கூட்டியோ வரும் மணி சுதேச மணியாகும்.
இலக்கினம்: குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட தினத்தில் சூரிய உதய காலம்
மறைவிடம்: 3, 6, 12
பாவாதிபன்: ஒரு ராசிக்கு, அல்லது பாவத்திற்கு அல்லது வீட்டிற்கு அதிபதி
சாயண முறை: மேற்கத்திய நாடுகளில் அதிகமாக இந்தமுறையை அநுசரித்து ஜாதகம் கணிக்கப்படுகின்றது. மேஷம் பூஜ்யம் டிகிரிக்குச் சூரியனின் காலத்தை அனுசரித்தது.
நிராயணம்: மேஷத்தில் அஸ்வினி நட்சத்திரத்தைக் கொண்டு பின்பற்றுவது.
அயனாம்சம்: சாயன - நிராயண வித்தியாசம்
கடக ரேகை: (Caner) பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ளது.உஷ்ண மண்டலத்தின் வடபகுதி ரேகை.
மகர ரேகை: (Capricorn) பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ளது.
கிரக பார்வை: ஒவ்வொரு கிரகமும் தன் ஸ்தானத்தில் இருந்து 7ம் இடத்தைப் பார்க்கும்.அத்துடன்
விசேஷ பார்வையாக:
குரு: 5 ம், 9 ம் இடத்தையும்;
செவ்வாய்: 4 ம், 8 ம் இடத்தையும்;
சனி: 3 ம், 10 ம் இடத்தையும்; பார்க்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிட குறிப்புகள்! - ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்