ஜோதிடம் குறிப்புகள் - ரிஷப இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்!

கிருத்திகை 2, 3, 4, பாதங்கள், ரோஹிணி, மிருக சீருஷம் 1, 2, பாதங்கள் இவைகளாகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள், அதாவது ரிஷிபராசிக்காரர்கள் பருந்த உடலும், கம்பீரமான தோற்றமும், மெதுவான செய்கைகளையும் மந்தமான குணங்களுடன், கல்வி கணிதம் சாஸ்திரங்களை ஓரளவு கற்றும், தேவாலய தெய்வீக வழிபாடுகளுடன், பக்தி, சிரத்தையுடன் இருப்பார்கள். ஆடை ஆபரணம், நகைகள், செல்வம், முதலியவைகளைப் பெற்றிருப்பார்கள்.
வேடிக்கையாகப் பேசும் குணங்களுடன், புத்திரர்களிடாத்திலும், மற்றும் குழந்தகளிடத்திலும் பிரியமாகப் பேசியும் பழகும் குணமும் இருக்கும். புளிப்பு, காரம், வஸ்துவில் பிரியம் அதிகம். தாங்கள் தாராள குணத்துடன் செலவு முதலியவைகளைச செய்யாமல், பிறரை செய்யும்படிஸ் சொல்லி, அதனால் பலங்களைத் தாங்கள் பெறுவார்கள்.
வண்டி வாகனங்களுடன் செல்வத்துடனும், செல்வாக்குடனும், இவர்கள் 80 வயதுக்கு மேலும் சரீர சுகங்களுடன் இருப்பார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரிஷப இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்