ஜோதிடம் குறிப்புகள் - கன்னி இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்!

கன்னியா லக்னமல்லவா? சற்று அடக்கமாகவே இருப்பார்கள். எதிலும் திறமைசாலியாக விளங்குவார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும் விவேகமும் இருக்கும். நல்ல நடத்தையுள்ளவர்களாகவும் விளங்குவார்கள்.
கன்யா லக்னத்திற்கு சந்திரனும், சனியும் சுபர்கள். செவ்வாய், குரு, பாவிகள் புதனும், சுக்கிரனும் யோகக்காரர்கள். புதனும், சுக்கிரனம் கூடி வலிமை பெற்றிருந்தால் நல்ல யோகத்தைக் கொடுப்பார்கள். சந்திரன், செவ்வாய், குரு இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.
இவர்கள் திறமைசாலிகள் என்று பெயர் எடுத்து புகழுடன் விளங்குவார்கள்.
இவர்கள் மிக எளிதில் பணக்காரர் ஆகிவிடுவார். நிறைய நட்பு வட்டமும்,நிறைய யோசனைகளும்,சாதூர்யமும் நிறைந்தவர் ஆச்சே.
பத்திரிக்கையாளர்கள்,மருத்துவர்கள்,ஆசிரியர்கள்,வழக்கறிஞர்கள் நிரைய பேர் இந்த லக்னத்தை சார்ந்தவர்கள்.
புதன்,சுக்கிரன் நன்றாக இவர்கள் ஜாதகத்தில் அமைந்திருந்தால் வாழ்நாள் முழுக்க யோகம்தான்.
லக்னத்தை சுபர்கள் பார்த்தால் ஆயுள் காரர்கள் சிறப்பாக இருந்தால் 77 வயது வரை ஆயுள் பலம் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கன்னி இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்