ஜோதிடம் குறிப்புகள் - சிம்ம இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்!

சிம்ம லக்னத்திற்கு பிறந்தவர்களைக் கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப்பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும். பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும். திடபுத்தியுள்ளவராகவும் இருப்பார்கள். ஆனால் முன்கோபியாகவும் இருப்பர்.
சிம்ம லக்னத்திற்கு செவ்வாயும், சூரியனும் சுபர்கள் சுக்கிரனும் புதனும் பாவிகள். செவ்வாயுடன் சுக்கிரன் கூடியிருந்தால் கெட்ட பலன்களையே கொடுப்பார்கள். சுக்கிரன் சனி, புதன் இவர்கள் மாரகாதிபதிகள். மாரக ஸ்தானத்தில் இவர்கள் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.
சிம்ம லக்னம் என்ற பெயருக்கேற்ப மற்றவர்களுக்கு பல சமயங்களில் சிம்ம ஸ்வரூபமாகவே இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வின் பிறபகுதியில் நற்பலனும்,யோகபலனும் பெறுவார்கள். அரசு அதிகாரிகள்,நகை,வண்டி வாகன தொழில் செய்பவர்கள்,அரசியல்வாதிகள் பலர் இந்த லக்னத்தில் பிறந்தவர்களாகவே இருக்கின்றனர்.
5,10,27,30 இந்த வயதுகளில் கண்டம் உண்டாகி விலகும்.
லக்கினத்தை சுபர்கள் பார்த்து லக்னாதிபதி,அஷ்டமாதிபதி,ஆயுள்காரகன் வலுத்திருந்தால் பூரண ஆயுள் உண்டாகும்.
கோபம்,பிடிவாதம்,இவரது பலவீனம். தன்னிடம் பழகுபவர்கள் நேர்மையாக,உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிம்ம இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்