ஜோதிடம் குறிப்புகள் - கடக இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்!

கடக லக்னம் சந்திரனின் ஆட்சி பெற்ற வீடாகும். சந்திரன் மனதுக்கு அதிபதி. உடலுக்கு அதிபதி என்பதால் இவர்கள் ம்னதும்,உடலும் தூய்மையானது. அழகானது. அன்பு நிறைந்தது. அழகிய கவர்ச்சியான உடல் அமைப்பு,கண்களையும்,வசியமான பேச்சையும் உடையவர்கள். சந்திரன் லக்னத்துல பிறந்துட்டு காதல்,காமம்,ஆசை இல்லாமலா. ? நிறைய இருக்கும். மன்மத ராசா தான். அல்லது தீர்க்கதரிசி. பெரும் லட்சியக்கனவு கொண்டவர்கள்,இந்த உலகிற்கு புதிய சரித்திர சாதனையை செய்ய பிறப்பெடுத்தவர்கள் எனலாம். என்ன காரணம் எனில் இவரது லக்னம் பெரியது. .நல்ல அறிவாற்றல்,புத்திக்கூர்மை நிறைந்தது. ஆக்கவும்,அழிக்கவும் இவர்களால் முடியும். காம ஆசையால்,பணத்தாசையால்,சூதாட்டத்தால் பொருளை இழநதவர்கள் இந்த லக்னத்தார் மிக அதிகம். அதே சம்யம் அருள் மட்டுமே வேண்டும். புதிதாக எதையாவது சாதிக்க வேண்டும்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என கடுமையாக உழைத்த மாகன்களும் அநேகம். இந்து மதத்தை பரப்ப தன் வாழ்நாள் முழுவதும் இந்தியா முழுக்க நடந்து,பல கோயில்களை சீர்திருத்திய ஆதிசங்கரர் பிறந்ததும் இந்த லக்னம் தான்.
யோகா,தியானம்,சித்த மருத்துவம்,சினிமா போன்ற கலைத்துறையில் சாதித்துக்கொண்டிருப்பவர்களிந்த லக்னத்தார் அதிகம். விஜய்,அஜீத் ,சூர்யா போல வர வேண்டும் என இன்றும் கோடம்பாக்கம் வீதிகளில் சாப்பாடு கூட இல்லாமல் சுற்றும் பல இளைஞர்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அநேகம். காரணம் கடக லக்னம் என்பது பெரிய ஆசைகளை தன்னகத்தே கொண்டது. சினிமா ஆசை மட்டும் அல்ல.அம்பானி,டாட்டா,லட்சுமி மிட்டல் போல தானும் தொழில் அதிபர் ஆக வேண்டும் என துடிப்பவர்களும் அநேகம்.
கடக லக்னத்தில் பிறந்தவருக்கு வேறு பெண்கள் பேரில் நாட்டம் இருக்கும் என்று சொல்லலாம். தந்தை சொல்லுக்கு அதிகமாக மதிப்புக் கொடுக்க மாட்டார்கள். இதனால் இவர்களுக்கு சிறிது கெட்ட பெயர் உண்டாகலாம். தானதர்மம் செய்வதில் தாராள மனப்பான்மை இருக்கும். செல்வங்கள் இவர்களை வந்தடையும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.மனைவி இவர்களுக்கு எப்போதும் எதிரிதான். அல்லது பிரிந்துவிடும். காரணம் 7 ஆம் பாவம் சனி வீடாக வருகிறது. பெண்களால் சந்தேகம் அடைந்து இவர் மனைவி இவரை துன்புறுத்துவார். அல்லது மனைவியால் இவருக்கு கெட்ட பெயர் உண்டாகலாம். மனைவிக்கும் இவருக்கும் ஈகோ பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும்.
கடக லக்னத்தில் செவ்வாயும், குருவும் சுபர்கள். செவ்வாய் யோகக்காரர்கள். செவ்வாயும் குருவும் சேர்ந்திருந்தால் நல்ல யோகத்தை கொடுத்து வாழ்க்கையை உயர்த்துவார்கள். சூரியன், புதன், சுக்கிரன் மூவரும் பாவிகள். சனி, சுக்கிரன், புதன் மாராகதிபதிகள். இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடக இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்