ஜோதிடம் குறிப்புகள் - ரிஷப இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்!

ரிஷப லக்னத்தில் பிறந்தவர். செல்வச் சீமானாக வாழும் அமைப்பு இருக்கிறது. நல்லவளும், அழகுள்ளவளுமான மனைவியை அடைந்து சந்தோஷ வாழ்க்கை அனுபவிப்பார். எப்போதும் கூடுமானவரையில் மன நிம்மதியுடனேயே வாழ்வார். கணக்கில் வல்லவராக இருப்பார். ரிஷப லக்னத்திற்கு சூரியனும், சனியும் நல்லவர்கள். லக்னத்தில் இந்த சுபர்கள் இருந்தாலும் பார்த்தாலும் ஆயுள் 75 என்று சொல்லலாம். குரு, சந்திரன், சுக்ரன் பாவிகள், சனி ஒருவரே இவர்களக்கு ராஜயோகம் கொடுப்பார். சனி திசை நல்ல யோகத்தை முன்னேற்றத்தை தரும்.
நல்ல நினைவாற்றல் உடையவர். சந்திரன் லக்னத்தில் அமைந்தால் மிக நல்லது. பிறரை பேசி மயக்குவதில் வல்லவர். குடும்ப பொறுப்பை சுமக்கும் சூழல் சிறு வயதில் இருந்தே உண்டகிவிடும். தாரளமாக செலவு செய்து அடிக்கடி பணச்சிக்கலை உண்டாக்கி கொள்வர். சிற்றின்ப ஆசை அதிகமாகவே இருக்கும். பெண்களாக இருந்தால் கண்ணழகும்,உடல் அழகும் பிறரை மயக்கும்படி அமைந்திருக்கும். எதிர்பார்ப்பு அதிகம் என்பதால் திருமண வாழ்க்கை ஏதாவது மனக்கவலை ஏற்பட்டவணமோ அல்லது ஏமாற்றம் தரும்படியாகவோ அமைந்துவிடும்.
செவ்வாய், புதன் மாரகர்கள், இவர்களுடன் பலன் பொருந்திய கிரஹங்கள் சேர்ந்திருந்தால் இவர்கள் மூலம் மாரகம் இல்லை.வெள்ளை நிறம் யோகம் தரும். மரகத பச்சை நவரத்னம் அணியலாம். மதுரை மீனாட்சியை வழிபடலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரிஷப இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்