ஜோதிடம் குறிப்புகள் - மேஷ இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்!

மேஷ லகனத்தில் பிறந்தவர் கம்பீரமான தோற்றம் உடையவர். செல்வங்களைச் சேர்ப்பதில் கருத்துள்ளவராக இருப்பார். அறிவும் அழகும் பொருந்தியபிறகும், பிறரிடம் பழகுவதில் சௌஜன்யமாக இருப்பார். பலர் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வார்.
முன்கோபம்,பிடிவாதமும் அதிகம் கணப்படும். முகத்திலும்,தலையிலும் தழும்பு இருக்கலாம். ஆணித்தரமான பேச்சு இருக்கும். 45 வயதுக்கு மேல் எதிர்பாராத பண வசதி உண்டாகும். உடன்பிறந்தோரால் சகாயம் இல்லைகடுமையாக உழைக்ககூடியவர்கள். சக்திக்கு மீறிய காரியங்களில் ஈடுபட்டு பிரச்சினைகளில் சிக்கி கொள்வார். வாழ்க்கை துணை விசயத்தில் ஏமாற்றம் உண்டாகும். அல்லது வாழ்க்கை துணை உடல்நலக்கோளாறுகளால் அவதிபடுவார். பவள மோதிரம் அணியலாம். பிறரை அளவுக்கு மீறி நம்புவது கூடாது. பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளவும் பிறர் சொல்வதையும் கேளுங்கள்.
மேஷ லக்னத்தில் சுபர்கள் இருக்க அல்லது சுபர்களால் பார்க்க பூர்ண ஆயுள் இருப்பார் என்று சொல்லலாம். இவர்களுக்கு சூரியன், குரு சுபர்கள், குருவோடு சனி சம்பந்தப்பட்டால் குரு எப்போதும் தன் பலனையே கொடுத்து வருவார். சூரியனும் குருவும் யோக்காரர்கள். இருவரும் ஒன்று கூடினால் நல்ல பலன்களையே கொடுத்து வருவார்கள். புதன், சுக்கிரன், சனி, இம்மூவரும் இவர்களுக்கு பாவிகள். புதன் மூலம் மாரகம் (மரணம்) இல்லை. சனி, சுக்ரன் மூலம் மாரகம் ஏற்படும்.லக்னத்தில் சனி நின்று நீசம் அடைந்தால் போராட்டமான வாழ்க்கையாக இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மேஷ இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்