சேது - காட்சி 9 - பகல் - INT. / கல்லூரி வகுப்பறை.
குளோஸ் ஷாட் - வகுப்பறையில் சேதுவும் அவன் நண்பனும் அமர்ந்திருக்கின்றனர்.
சேதுவின் நண்பன் : 'சண்டியர்'னு இருக்குமா?
மிட் ஷாட் - சேது அவனது தலையில் அடிக்கிறான்.
நண்பன் : இல்லடா... நம்ம கேரக்டருக்கு ஏத்த பெயரா இருக்கேன்னு பார்த்தேன்... சரி விடு. பார்ட்டிகிட்டயே கேட்டுருவோம். ஏம்மா...
என்ற நண்பன் ஆசிரியையைக் கூப்பிடுகிறான்.
குளோஸ் ஷாட் - போர்டில் எழுதிக்கொண்டிருக்கும் ஆசிரியை திரும்பிப் பார்க்கிறாள்.
ஆசிரியை : ம்...?
குளோஸ் ஷாட் - நண்பன் : மேடம்... அதெல்லாம் இருக்கட்டும்... இந்த சிய்யான்னா என்னான்னு தெரியுமா...?
குளோஸ் ஷாட் -ஆசிரியை : சிய்யானா...?
காட்சி 9A - பகல் - INT. / கல்லூரி வளாகம்.
மிட் ஷாட் - ஆசிரியர்கள் பேசிக் கொண்டிருக்க ஒரு மாணவன் வருகிறான்.
ஆசிரியர் : வார்த்தையே புதுசா இருக்கு
மாணவன் : சார்...
அந்த மாணவனிடம்...
ஆசிரியர் : என்ன சாமி, சந்தேகமா? எனக்கொரு சந்தேகம்... இந்த சிய்யான்னா என்ன...? எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகணும் சாமி...
காட்சி 9B - பகல் - INT. / கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வறை.
மிட் ஷாட் - நான்கு ஆசிரியர்கள் கூடப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ஆசிரியை : வெவஸ்தை கெட்டவனான்னு இருக்கும்...
இன்னொரு ஆசிரியை : ரிடிகுளஸ்
ஆசிரியர் : நோ... நோ... இட் ஈஸ் வெரி இம்பார்ட்டண்ட். எனி டிக்ஷனரி? ஐ திங்க் தமிழ் அகராதிய பொரட்டுனா தெரியுமுன்னு நினைக்கிறேன்.
காட்சி 9C - பகல் - INT. / கல்லூரி நூலகம்.
மிட் ஷாட் - மாணவர்கள் கூட்டமாக ஓடி வந்து நூலகத்தினுள் நுழைகின்றனர்.
மாணவன் : இந்தத் தமிழ் அகராதி எல்லாம் எங்க இருக்கு...
நுரலகர் : எதுக்கு...? சியய்யான்னு அர்த்தம் தெரியணுமா...?
பர்ஸ்ட் ரோ... என்று வழிகாட்டிவிட்டு,
கருமம்... கருமம்...
மாணவர்கள் நகர்ந்ததும் தலையில் அடித்துக் கொள்கிறார் நூலகர்.
காட்சி 9D - பகல் - INT. /
மிட்ஷாட் - ஒரு வயதானவர் : பகவான் பேருடா. மற்றொருவர் 'என்ன' என்பது போல் கையை ஆட்டுகிறான்.
குளோஸ்ஷாட்-வயதானவர்: சீமான்... சிய்யான்... என்ன என்று கேட்டவன் பக்தியுடன் கும்பிடுகிறான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - ஆசிரியை, குளோஸ், காட்சி, நண்பன், ஆசிரியர், மாணவன், ஆசிரியர்கள், கல்லூரி