சேது - காட்சி 8 - பகல் - INT. / EXT. கோயில்.
குளோஸ் ஷாட் - கோயில் கோபுரம்.
மிட் ஷாட் - ஒரு கடையில் பேரம் நடக்கிறது.
கடைக்காரர் : தட்டு பன்னிரெண்டு ரூபா.
பெண் : அதெல்லாம் முடியாது. எள்ளுருண்டை மாதிரி ஒரு தேங்காயை வச்சுண்டு பன்னிரெண்டு ரூபா சொல்றியேப்பா...
கடைக்காரர் : உங்க ஊரிலே எள்ளுருண்டை இப்படித்தான் இருக்குமாக்கும்.
பெண் : விலையைப் பார்த்துக் கொடுப்பா.
சேதுவின் அண்ணன் வாசுதேவன் குடும்பத்தினருடன் வருகிறார். உடன் சேதுவும் வருகிறான். கடையில் அர்ச்சனைத் தட்டு வாங்குகிறார். மிட் ஷாட் - வாசுதேவன் செருப்பு பாதுகாக்கும் கடைக்கு வருகிறார்.
கடைக்காரர் : வாங்க சார்.
அண்ணன் : எவ்வளவுப்பா?
கடைக்காரர் : இருக்கட்டும் சார்...
அண்ணன் : பரவாயில்லை, எவ்வளவுன்னு சொல்லுப்பா.
கடைக்காரர் : அட... ஏங்க சார்... சிய்யான் சாரை நமக்குத் தெரியாதுங்களா...?
அண்ணன் சங்கடமாகப் பார்க்கிறார்.
மிட் ஷாட் - சேது குடும்பம் கோயில் உள்ளே வர, ஒருவன் சேதுவுக்கு வணக்கம் சொல்கிறான்.
குளோஸ் ஷாட் - ஒருவன் : வணக்கம் சிய்யான்.
குளோஸ் ஷாட் -அண்ணன் : (டென்ஷனாகி) போறான் பாரு... ஆளும்... இவனும்... பழமொழி ஒண்ணு கேள்விப்பட்டிருக்கியாடி?
குளோஸ் ஷாட் -சேது. குளோஸ் ஷாட் - அண்ணன், அண்ணி.
அண்ணி : என்ன பழமொழி?
அண்ணன் : இந்த காசிக்குப் போனாலும் கருமம் தொலையாதும்பாங்க. அது இதுதான்... ஐயோ...
சேது அண்ணனை முறைத்துவிட்டு கோபமாக வருகிறான்.
குளோஸ் ஷாட் - சேது.
மிட் ஷாட் - சேது, அண்ணி, அண்ணன்.
சேது : இதுக்குத்தான் நான் இந்த ஆள் கூட வரமாட்டேங்கிறது.
கோபித்துக் கொண்டு சேது திரும்பிப் போக முயற்சி செய்ய அவனை அண்ணி தடுக்கிறாள். கணவரைக் கடிந்து கொள்கிறாள்.
அண்ணி : நீங்க கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா?... பொறந்த நாளும் அதுவுமா புள்ளையை ஏதாவது சொல்லிக்கிட்டு... நீ போப்பா... போ...
கோயில் உள்ளே போகிறான் சேது.
அண்ணன் : பச்சைக் குழந்தை...
லாங் ஷாட் - அபிதா கோயிலினுள்ளே பாடிக்கொண்டிருக்கிறாள்.
குளோஸ் ஷாட் - அபிதா பாடுகிறாள்.
லாங் ஷாட் - அபிதா பாடுகிறாள். சேது குடும்பத்தினர் அங்கே வருகின்றனர்.
அபிதா : ஓம் நமச்சிவாய...ஓம் நமச்சிவாய...ஒம் நமச்சிவாய...ஓம் நமச்சிவாய...
குளோஸ் ஷாட் - சேதுவும் அண்ணனும் அபிதாவைப் பார்க்கின்றனர். குளோஸ் ஷாட் - கண்ணை மூடியபடி பாடிய அபிதா நிமிர்கிறாள். சேதுவைப் பார்த்ததும் மிரட்சியாகப் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேது அவளைப் பார்த்து சினேகமாக சிரிக்கிறான்.
குளோஸ் ஷாட் - அபிதா தலை கவிழ்கிறாள். மிட் ஷாட் - அண்ணி அபிதாவைப் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - அபிதாவைப் பார்க்கும் சேது. அண்ணன் அவனைப் பார்க்கும்போது வேறு பக்கம் பார்க்கிறான். மிட் ஷாட் - குருக்கள் வருகிறார். பிரசாதத்தை அபிதாவிடம் கொடுக்கிறார்.
குருக்கள் : நீ ஆத்துக்குப் போயி அம்பியை வரச் சொல்லு.
அபிதா போகிறாள்.
அண்ணி பக்கம் திரும்பிய
குருக்கள் : யாரு பேருக்கு...?
அண்ணி : சிய்யான்...
குளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் அதிர்ச்சியாக மனைவியைப் பார்க்கிறார்.
குளோஸ் ஷாட் - அண்ணி பயந்தபடி...
அண்ணி : அய்யோ...! சேது, மக நட்சத்திரம், சிம்ம ராசி.
குருக்கள் : ஓம்...
குருக்கள் மந்திரம் சொல்லியபடி உள்ளே போக, சேதுவின் அண்ணனும் அண்ணியும் கண் மூடி சாமி கும்பிடுகின்றனர்.
குளோஸ் ஷாட் - சேது போகிறான். மிட் ஷாட் - சேது வெளியே வருகிறான். மிட் ஷாட் - எதிரே வரும் அபிதாவை வழி மறிக்கிறான் சேது.
ஏய்
கிணற்று மேட்டில் உட்கார்ந்து கொண்டு அபிதாவை அழைக்கிறான்.
அபிதா : ம்...
அபிதா வருகிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : அவன்தான் உங்க அப்பனா...?
அபிதாவிடம் சேது கேட்க, 'ம்' என்று தலையாட்டுகிறாள் அபிதா.
சேது : ஆள் சம்மந்தமே இல்ல. பார்த்தா தேவாங்கு மாதிரி இருக்கான்... இவன்கிட்டே உன் பேருக்கு அர்த்தம் கேட்டியா...?
குளோஸ் ஷாட் - அபிதா : ம்...
குளோஸ் ஷாட் - சேது : என்னவாம்...?
குளோஸ் ஷாட் - சஜஷன் - சேது
அபிதா : தமிழ்லே சொல்லவா...? இல்ல சமஸ்கிருதத்திலே சொல்லவா...?
குளோஸ் ஷாட் -சஜஷன் அபிதா.
சேது : அது வேற இருக்கா...?
தமிழ்லயே சொல்லு.
குளோஸ் ஷாட் - சஜஷன் சேது. தொண்டையைக் கனைத்துக்கொண்டு விவரிக்கிறாள் அபிதா : இல்லை... இந்த பேரு வச்சுண்டவால்லாம் தோப்பனாருக்கு ரொம்ப நல்லப் பொண்ணா இருப்பாளாம். ஆம்படையான் மனசுக்குப் பிடிச்ச மாதிரியும் நடந்துக்குவாளாம். செத்த நேரம் கண்ணை மூடி வருண பகவான்கிட்டே வேண்டிண்டா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுமாம்.
குளோஸ் ஷாட் - சேது.
குளோஸ் ஷாட் - அபிதா : அப்புறம்... மறந்து போச்சு!
குளோஸ் ஷாட் - சேது அவளை ஆச்சரியமாகப் பார்க்கிறான்.
குளோஸ் ஷாட் - சஜஷன் சேது.
அபிதா : கோபம் வந்து பச்சை மரத்தைப் பார்த்தாக் கூட அது அப்படியே கருகி சாம்பலாயிடுமாம்...
குளோஸ் ஷாட் - சேது தலையாட்டுகிறான்.
குளோஸ் ஷாட் - அபிதா அவனையே பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : நல்ல பேராத்தான் வச்சிருக்கான். ஆமா, அது யாரு...? அந்த ரெண்டு பேரு...?
குளோஸ் ஷாட் சஜஷன் - அபிதா : எந்த ரெண்டு பேரு?
குளோஸ் ஷாட் -சஜஷன் அபிதா
சேது : நீதான் இப்ப சொன்னியே...
தோப்பனாரு, ஆம்படையான்னு...
குளோஸ் ஷாட் - சஜஷன் சேது.
அபிதா : அது அப்பாவும்...
கட்டி... கட்டிக்கப் போறவரும்.
தயங்கியபடி சொல்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேது தலையாட்டி சிரிக்கிறான். குளோஸ் ஷாட் - அபிதா. மிட் ஷாட் - பிரசாதத் தட்டிலிருந்து சேதுவுக்கு முறுக்குக் கொடுக்கிறாள் அபிதா.
சேது : என்னது?
அபிதா : நெய் முறுக்கு...
அதை வாங்கிச் சாப்பிடுகிறான் சேது.
சேது : நல்லா இருக்கே... எங்க வாங்குனே...
குளோஸ் ஷாட் - அபிதா : வாங்கலே... நானே செஞ்சேன்...
சேது : நீயா செஞ்சியா...
அபிதா : ம்...
சேது : இன்னும் ரெண்டு கொடு...
சேது முறுக்குத் தின்று கொண்டே கேட்கிறான். அவள் கொடுத்த முறுக்கைப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறான்.
குளோஸ் ஷாட் - சஜஷன் சேது.
அபிதா : உங்களை ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டேளே...?
குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா - இல்லை என்று தலையாட்டுகிறான் சேது.
குளோஸ் ஷாட் -அபிதா : உங்க பேரு சேதுதானே...?
குளோஸ் ஷாட் - 'ம்' என்று தலையாட்டுகிறான் சேது.
குளோஸ் ஷாட் - அபிதா : இப்படி ஒரு நல்ல பேரு இருக்கறச்சே... ஏன் உங்களை எல்லாரும் சிய்யான் சிய்யான்னு கூப்பிடுறாள்...
குளோஸ் ஷாட் - சேது முகத்தில் அதிர்ச்சி.
குளோஸ் ஷாட் - அபிதா : அப்படீன்னா என்ன அர்த்தம்...?
குளோஸ் ஷாட் -சேது அதிர்ச்சியடைகிறான்.
குளோஸ் ஷாட் -அபிதா.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், அண்ணன், கடைக்காரர், குருக்கள், நமச்சிவாய, சிய்யான், ரெண்டு, தலையாட்டுகிறான், பார்க்கிறாள், வருகிறான், கோயில், சேதுவின், வருகிறார், அபிதாவைப்