முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
» காட்சி 58 - பகல் - EXT./ INT./ பாண்டிமடம்
சேது - காட்சி 58 - பகல் - EXT./ INT./ பாண்டிமடம்
மிட் ஷாட் - கேட் திறக்கப்பட, அம்பி, அபிதா இருவரும் பாண்டிமடம்
உள்ளே வருகின்றனர்.
டாப் ஆங்கிள்/ லாங் ஷாட் - அம்பி, அபிதா வருகின்றனர்.
லாங் ஷாட் - அம்பி, அபிதா வருகின்றனர்.
மிட் ஷாட் - அபிதா வருகிறாள். அம்பி வருகிறான்.
மனநோயாளிகளின் குரல் (Overlap): வணக்கம்...வந்தனம்...நமஸ்தே...நமஸ்கோர்...
வணக்கம், வந்தனம், நமஸ்தே...சாமி...குட்மார்னிங்...
மனநோயாளிகள் பலவாறாக சத்தமிட்டுக் கொண்டிருக்கின்றனர். அபிதா, அம்பி
மிரட்சியுடன் வருகிறார்கள். நோயாளிகளிடையே சேதுவைத் தேடுகிறாள் அபிதா.
ஓரிடத்தில் சேதுவைப் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேதுவின் நிலைமை கண்டு அதிர்கிறாள். குளோஸ் ஷாட் - சேது
காயத்துடன், அடையாளம் தெரியாத அளவுக்கு, உருக்குலைந்துபோய்
படுத்திருக்கிறான். குளோஸ் ஷாட் -அபிதா அதிர்ச்சியுடன் பார்க்கிறாள். குளோஸ்
ஷாட் - சேது தூங்கிக் கொண்டிருக்கிறான். குளோஸ் ஷாட் - அபிதா அவன்
அருகில் உ ட்காருகிறாள்.
குளோஸ் ஷாட் - சேது தூங்குகிறான்.
குளோஸ் ஷாட் - அம்பி பார்க்கிறான்.
குளோஸ் ஷாட் - அபிதா அழுகிறாள்.
குளோஸ் ஷாட் - சேது தூங்குகிறான்.
குளோஸ் ஷாட் - வாயைப் பொத்தியபடி அழுகிறாள் அபிதா. தான் கொண்டு வந்த
பையை அவன் அருகில் வைத்துவிட்டு புறப்படுகிறாள்.
லாங் ஷாட் - அழுதுகொண்டு அபிதா திரும்பி வருகிறாள். குளோஸ் ஷாட் - சேது
தூங்குகிறான். மிட் ஷாட் - அம்பி, அபிதா போகிறார்கள். மிட் ஷாட் - சேது
கண் விழிக்கிறான். அபிதா வைத்துவிட்டுப் போன பையைப் பார்க்கிறான். குளோஸ்
ஷாட் - பையில் கையை விட்டு ஒரு பொட்டலத்தை எடுக்கிறான். அதில் நெய்
முறுக்கு இருக்கிறது. அதைப் பார்க்கிறான். மிட் ஷாட் - அம்பியுடன்
அபிதா போய்க் கொண்டிருக்கிறாள். மிட் ஷாட் - அவளைப் பார்த்த சேது
கத்துகிறான்.
சேது: அபி...அபி...
மிட் ஷாட் - சேது கத்துகிறான். அவன் கதறல் மற்றவர்களின் சத்தத்தில்
அமுங்கிப் போகிறது. அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் அபிதாவைக்
கூப்பிடச் சொல்லிக் கெஞ்சுகிறான்.
சேது: கூப்பிடுங்கம்மா...கூப்பிடுங்கம்மா...அபி...
மிட் ஷாட் - சேது கத்துகிறான். மிட் ஷாட் - சேது தரையில் அடித்தபடி
அழுகிறான். குளோஸ் ஷாட் - பஸ்ஸில் அபிதா அழுதுகொண்டே போகிறாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 56 | 57 | 58 | 59 | 60 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், கத்துகிறான், பார்க்கிறான், அருகில், வருகின்றனர், தூங்குகிறான்