சேது - காட்சி 50 - காலை - INT. /அபிதா வீடு
குளோஸ் ஷாட் - அபிதா சுலோகம் சொல்கிறாள்.
அங்கார கமலி புத்ரா
பகவன் பக்த வச்சலா
மிட் ஷாட் - குருக்கள் வருவதை கவனிக்காமல் கண் மூடி சுலோகம் சொல்கிறாள்.
மமா சேஸ ரோகம் ஆசு வினா சயா
அங்கார கமலி புத்ரா
பகவன் பக்த வச்சலா
குருக்கள்: யாருக்கு குணமாகனுன்னு இந்த தோத்ரம் சொல்லிண்டு இருக்கா?
அம்பி வர, அவனிடம் கேட்கிறார் குருக்கள்.
குளோஸ் ஷாட் - அபிதா குரல் (Overlap) : அங்கார கமலி புத்ரா
குருக்கள் : சாப்பிட்டாளோ என்ன...?
அம்பி: இல்லே, கார்த்தாலே உட்கார்ந்தவதான்.
குருக்கள்: அம்பி, நோக்கு உடம்புக்கு ஒண்ணுல்லையே...
அம்பியின் உடம்பைத் தொட்டுக் கேட்கிறார் குருக்கள்.
அம்பி: நேக்கு ஒண்ணுமில்லே. கூட படிக்கிறவாளுக்கு சித்த சுவாதீனம் இல்லேன்னுட்டு...
குளோஸ் ஷாட் - அபிதா: பகவன் பக்தவச்சலா
குளோஸ் ஷாட் - குருக்கள்: பார்த்தியோன்னா அப்படியே அவ அம்மா மனசு. வேத்து மனுஷானுகூட பார்க்காம வேண்டிண்டு இருக்கா பாரு...
பெருமிதமாக சொல்கிறார் குருக்கள்.
அம்பி: அவன் ஒண்ணும் வேத்து மனுஷா இல்லே...
குருக்கள்: பின்னே? கேக்குறேனோன்னோ
அம்பி: காலேஜ்லே கூட படிக்கிறவன். நம்ம அபித்தும் அவனை...
குருக்கள் முகத்தில் அதிர்ச்சி தெரிகிறது.
குருக்கள்: அவனை...?
குளோஸ் ஷாட் - அபி சுலோகம் சொல்கிறாள்.
அங்கார கமலி புத்ரா...
பகவன் பக்தவச்சலா
குளோஸ் ஷாட் - குருக்கள். சஜஷன் அம்பி.
குளோஸ் ஷாட் - அம்பி. சஜஷன் குருக்கள்.
குளோஸ் ஷாட் - அம்பி. சஜஷன் குருக்கள்.
குளோஸ் ஷாட் - அபிதா பாடுகிறாள்.
குளோஸ் ஷாட் - அம்பி குருக்களிடம் சொல்கிறான். குருக்கள் அழுகிறார். வசனங்கள் இல்லாத ஷாட்ஸ்.
மிட் ஷாட் - பாடிக் கொண்டிருக்கும் அபிதாவின் அருகில் செல்கிறார் குருக்கள்.
குளோஸ் ஷாட் - அபிதாவின் முகத்தைத் தன் பக்கம் திருப்புகிறார்.
குளோஸ் ஷாட் - குருக்கள்: அபித்து... அம்பி சொல்றதெல்லாம் உண்மைதானாம்மா...
குளோஸ் ஷாட் - அபிதா அம்பியைப் பார்க்கிறாள். பிறகு 'ஆமாம்' என்பதுபோல் அழுகையுடன் தலையாட்டுகிறாள். குளோஸ் ஷாட் - குருக்கள் அழுகிறார். குளோஸ் ஷாட் - அபிதாவும் அழுகிறாள்.
குளோஸ் ஷாட் - குருக்கள்: உங்க அக்கா பண்ணின காரியத்துக்கு நான் பிராணனே விட்டிருக்கணும். இன்னும் இந்த உடம்புல உசிர் ஒட்டிண்டு இருக்குன்னா அதுக்கு நீதான் காரணம். நீயுமா இப்படி...
குளோஸ் ஷாட் - அபிதா: தப்புன்னு சொல்றேளா...
குளோஸ் ஷாட் - குருக்கள்: அபித்து...
குளோஸ் ஷாட் - அபிதா: நேக்கு இதுதான் சரின்னு தோண்றதுப்பா...
குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா
குருக்கள்: அபித்து அந்த பையனுக்கு ரொம்பப் பெரிய மனசு, இல்லேங்கலே. அவன் நமக்கு பெரிய உதவி பண்ணியிருக்கான். நாம நன்றி செலுத்தி ஆகணும். அத விட்டுட்டு உன்னையே கொடுக்கணுமுன்னு முடிவே பண்ணிடுறதா? தப்பும்மா...
குளோஸ் ஷாட் - அபிதா: கொடுக்கணுமுன்னு முடிவு பண்ணிட்டப்புறம் இதுல மனசென்ன, உடம்பென்ன? ரெண்டும் ஒண்ணுதானேப்பா...
குளோஸ் ஷாட் - அபிதா சொன்னதைக் கேட்டு அதிர்கிறார் குருக்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், குருக்கள், புத்ரா, அங்கார, அபித்து, சுலோகம், சொல்கிறாள்