சேது - காட்சி 47 - இரவு - INT./ பாண்டி மடம்.
லாங் ஷாட் - பாண்டிமடத்தில் இருக்கும் மன நோயாளிகளின் சத்தம். 'பாண்டி மடம், இராமநாதபுரம் ஜில்லா' என்ற டைட்டில் கார்டு. ஸ்டடி கேம் (காமிராவில் படம் பிடிக்கப்பட்ட) ஷாட் - பாண்டி மடத்தில் இருக்கும் பல்வேறு மனநோயாளிகளையும், பாண்டிமடத்தின் சூழ்நிலையையும் காட்டுகிறது.
'எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ யாரோ அறிவார்...'
.....பாடல் காட்சி.
மிட் ஷாட் - அடையாளம் தெரியாத அளவுக்கு மொட்டை அடிக்கப்பட்டு, கிழிந்த இடுப்புத் துணியுடன், வெற்றுடம்பில் சங்கிலி பிணைக்கப்பட்டு, பரிதாபமான தோற்றத்துடன் தரையில் படுத்துக் கிடக்கிறான் சேது.
பின்னணியில் ஒலிக்கும் பாடல் தொடர,
பாண்டிமடத்தின் முழுமையான பின்னணியும், அங்கே தரப்படும் சிகிச்சை முறைகளும், காட்சிகள் மூலம் விளக்கப்படுகினறன. மனநோயாளியாக இருக்கும் சேதுவுக்கு சிகிச்சை தரப்படுகிறது. அவனது அண்ணன், அண்ணி மற்றும் நண்பர்கள் ஊமைப் பெண் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சேதுவைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - இருக்கும்