சேது -
காட்சி 45 - பகல் - INT/ மருத்துவமனை குளோஸ் ஷாட் - அண்ணன், அண்ணி பார்க்கின்றனர்.
குளோஸ் ஷாட் - தலையில் கை வைத்தபடி டாக்டர்.
குளோஸ் ஷாட் - அண்ணன், அண்ணி.
மிட் ஷாட் - டாக்டருக்கு எதிரில் அண்ணன், அண்ணியுடன் சேதுவின் நண்பனும் இருக்கிறான்.
டாக்டர்: உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கிற வாட்ச்மேனுக்காக வருதூதப்படறதா... இல்லே, பொழச்சுக்கிட்ட உங்க தம்பிக்காக சந்தோஷப்படுறதான்னே தெரியலே. இவ்வளவு நடந்தும் அவன் பொழைச்சு இருக்கான்னா... இட்ஸ் டெஃபனட்லி பீயிங் மிர்ரக்கில்.
குளோஸ் ஷாட் - டாக்டர்: உயிர் இருக்குதே தவிர, எதையும் உணர்ற ஸ்டேஜிலே பேஷண்ட் இல்ல. இட்ஸ் வெரி பேத்தடிக்.
குளோஸ் ஷாட் - அண்ணன். அண்ணி
மிட் ஷாட் - டாக்டர் நாங்க கொடுக்கிற ட்ரீட்மெண்ட்டுலே ஒருவருஷத்திலேயும் குணமாகலாம்... பத்து வருஷத்திலும் குணமாகலாம். இல்லே குணமே ஆகாம க்ரானிக் பேஷண்ட்டாகவும் போயிறலாம்.
குளோஸ் ஷாட் : அண்ணன்
மிட் ஷாட் டாக்டர்: மெடிக்கலி ஹோப்லெஸ்னு நாங்க முடிவு பண்ணி சில கேசுங்க இங்கேயிருந்து ஏர்வாடி குணசீலம்னு போறாங்க.. நாங்க அவங்களைத் தடுக்கறதில்லை... ஏன்னா ஒரு நம்பிக்கை... இங்கே நோயாளி மட்டுமில்லே... நோயை குணப்படுத்துறவனும் கடவுளத்தான் நம்புகிறான்.
குளோஸ் ஷாட் - அண்ணி டாக்டரைப் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - டாக்டர்: என்ன பண்றது சொல்லுங்க...? நம்ம கலாச்சாரத்தைப் பொறுத்தவரைக்கும் பக்தியும், வைத்தியமும் ஒண்ணாப் பின்னிக்கிட்டு கிடக்கு.
குளோஸ் ஷாட் - அண்ணி தன் கணவரைப் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - டாக்டர்: இப்ப எனக்கே உடம்பு சரியில்லேன்னு வச்சுக்குங்க... நான் மாத்திரை எடுக்கிறதுக்குள்ளே என் வொய்ஃப் விபூதியும் கையுமா வந்துநிப்பா...இங்கே விபூதியா, மாத்திரையாங்கிறதை விட குணமாகுதா இல்லையாங்கிறதுதான் முக்கியம்.
குளோஸ் ஷாட் - சேதுவின் நண்பன் டாக்டரை எரிச்சலாகப் பார்க்கிறான்.
மிட் ஷாட் - டாக்டர்: உங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கலாம்.. நான் சொல்லப்போறதும் ஏர்வாடி, குணசீலம் அது மாதிரி ஒரு இடம்தான்.
குளோஸ் ஷாட் - கோபமாக சேதுவின் நண்பன் எழுந்து போக, சேதுவின் அண்ணன் அவனைப் பார்த்துவிட்டு டாக்டர் சொல்வதைக் கவனிக்கிறார்.
மிட் ஷாட் - டாக்டர்: அஸ் எ டாக்டர்... இதை நான் உங்ககிட்டே சொல்லக் கூடாது. என்ன...
இந்த மாதிரி கிளிட்டன் மெத்தட்ஸ் ஸ்டெரிலைஸ் ப்ராசஸ் இதெல்லாம் அங்கே இருக்காது... ஆனா ட்ரெடிஷனல் வேல்யூ தெரப்பி கான்ஸ்ப்ட்ட யூஸ் பண்ணி நிறைய பேஷண்ட்ஸை க்யூர் பண்ணி இருக்காங்க.
குளோஸ் ஷாட் - அண்ணன், அண்ணி இருவரும் கவலையுடன் பார்க்கின்றனர்.
குளோஸ் ஷாட் - டாக்டர்: அதுக்காக அந்த எடம் மட்டும்தான் சரின்னு நான் சொல் வரலை... இங்கேயே இருந்து என்ன பண்றதுன்னு யோசிக்கறதை விட ஒரு தடவைப் போய்ப் பார்க்கிறது நல்லதுங்கிறது என்னோட சஜஷன். அதுவும் நீங்கங்கறதினால சொல்றேன்...
குளோஸ் ஷாட் - அண்ணி: நீங்க சொல்ற அந்த எடம் எங்கே இருக்கு?
அழுதபடி கேட்கிறாள்.
காட்சி 45A - பகல் - EXT./ மருத்துவமனை வாசல்
மிட் ஷாட் - சேதுவின் நண்பன் டென்ஷனாக சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க, அண்ணன், அண்ணி வருகின்றனர். சிகரெட்டைக் கீழே போடுகிறான். சேதுவின் அண்ணனிடம் கோபமாகக் கேட்கிறான்.
நண்பன்: என்ன பண்றதா உத்தேசம்...?
குளோஸ் ஷாட் - அண்ணன்: என்னப்பா கேள்வி இது? ஏதாவது ஒரு நல்லது நடக்கணுமுன்னா அனுப்பித்தானே ஆகணும்...
நொந்து போய் சொல்கிறார்.
மிட் ஷாட் - நண்பன்: போயா உங்க கேன...
சேதுவின் அண்ணனின் முகத்துக்கு நேராக கை நீட்டிக் கோபமாகப் பேசுகிறான்.
குளோஸ் ஷாட் - அண்ணன், அண்ணியின் முகத்தில் கடும் அதிர்ச்சி. குளோஸ் ஷாட் - சற்று தூரத்தில் நிற்கும் மற்றொரு நண்பனும் அதிர்ச்சியடைகிறான்.
குளோஸ் ஷாட் - நண்பன்: உன்னாலே முடியலேன்னா பொத்திக்கிட்டுப் போ... நாங்க பார்த்துக்கறோம்
குளோஸ் ஷாட் - அண்ணியின் முகத்தில் கோபம்.
மிட் ஷாட் - நண்பன்: அவன் ஏதோ சொல்றான்னு இவர் மண்டையை மண்டையை ஆட்டிக்கிட்டு வர்றாரு...
குளோஸ் ஷாட் - அண்ணி: ஏய்... யார்கிட்ட என்ன பேசுறே...
அண்ணி கோபமாகக் கேட்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் மனைவியைச் சமாதானப்படுத்துகிறார்.
அண்ணன்: அவர் ஏதோ சொல்றாரு... கேட்போம்
மிட் ஷாட் - நண்பன்: கேட்டு...? நல்லா வந்துறப் போகுது வாய்ல... நீ எல்லாம் படிச்சு...
ஆபாசமாகப் பேசிய நண்பனை ஓங்கி அறைகிறாள் அண்ணி.
குளோஸ் ஷாட் - ஒரு பைத்தியக்காரன்: அப்படிப்போடு, சபாஷ்...
மிட் ஷாட் - அண்ணி: எங்க புள்ளைய எப்படிக் காப்பாத்தனுமுன்னு எங்களுக்குத் தெரியாது...? பெரிசா பேச வந்துட்டான். என் புத்தியை செருப்பாலே அடிக்கணும். நீங்க செஞ்ச காரியத்துக்கெல்லாம் கூட இருந்து தாளம் போட்டேன் பாரு...
குளோஸ் ஷாட் - அண்ணன்: அப்படியென்ன அவன் தப்பா பேசிட்டான்...? அவனுக்கு அவன் ஃப்ரெண்டு முக்கியம்... போ... ம்...
அண்ணி போகிறாள்.
குளோஸ் ஷாட் - அண்ணன்: எல்லாம் ஒரு முயற்சி தானேப்பா...
நண்பன்: அதில்லேன்னே...
நண்பன் கண் கலங்குகிறான்.
அண்ணன்: என்ன... ஒரு நாற்பது நாள் பொறுத்துக்குவோம்.
நண்பன்: ம்...
அண்ணன்: எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குடா... நாங்க அவனைச் சரியா வளர்த்தோமோ இல்லையோ... உங்களை மாதிரி நல்ல ஃப்ரெண்ட்ஸோட அவன் வாழ்ந்திருக்கான்...
நண்பனின் தலைமுடியைக் கோதிவிடும் அண்ணன், கண் கலங்கி நெகிழ்ச்சியாக சொல்கிறார். நண்பன் அழுகிறான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், அண்ணன், நண்பன், டாக்டர், சேதுவின், மாதிரி