முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
»
காட்சி 4 - பகல் - EXT. / ரயில்வே ஸ்டேஷன்.
சேது - காட்சி 4 - பகல் - EXT. / ரயில்வே ஸ்டேஷன்.
லாங் ஷாட் - கல்லூரி மாணவ, மாணவிகள் கூட்டமாக சென்றுகொண்டிருக்க, சேது பைக்கில் வருகிறான். சடன் பிரேக் போட்டு பைக்கை நிறுத்துகிறான்.
மிட் ஷாட் - ரயில்வே ஸ்டேஷன் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து சேதுவின் நண்பர்கள் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்க சேது வருகிறான்.
சேது : டீ சொல்லு. (நண்பனைப் பார்த்து) கஞ்சா குடிக்கிற நாயே... காலங்கார்த்தாலேயே ஆரம்பிச்சுட்டியாடா...
நண்பனைத் திட்டிய சேது, டீ சொல்லப்போன மற்றொரு நண்பனை அழைக்கிறான்.
சேது : சாமி...
காலி சிகரெட் பாக்கெட்டைக் காட்டி சிகரெட் வாங்கி வரச் சொல்கிறான்.
சேதுவின் நண்பன் : இளமை அது போனா அது திரும்பாது...
கஞ்சா மயக்கத்தில் பாடுகிறான்.
இன்னொருவன் : ஏய், அடடா...
குளோஸ் ஷாட் - தோழியுடன் வரும் அபிதா அவர்களைப் பார்க்கிறாள். தோழி சேதுவைக் காட்டி,
காலேஜ் சேர்மன்...?
மிட் ஷாட் -நண்பர்களுடன் சேது அமர்ந்திருக்கும் இடத்தை அபிதா கடக்க அவளைப் பார்த்துக்கொண்டே...
சேது : இது யாருடா...இது?
நண்பனிடம் கேட்ட சேது 'ஓய்' என்று சத்தம் எழுப்பி அவளைக் கூப்பிடுகிறான்.
குளோஸ் ஷாட் - அபிதாவும் தோழியும் நிற்கின்றனர். குளோஸ் ஷாட் - சேது 'வா' என்று சைகையால் அழைக்கிறான். குளோஸ் ஷாட் - அபிதா பயந்துபோய் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : இங்க வா...
டாப் ஆங்கிள்-மிட் ஷாட் -அபிதாவும் தோழியும் வருகிறார்கள்.
சேது : நீ என்ன? இவளுக்குக் கொடுக்கா? ஓடுறீ...
தோழியை விரட்டுகிறான் சேது. குளோஸ் ஷாட் - தோழி போகிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : ஏய்... ஃபர்ஸ்ட் இயரா...?
குளோஸ் ஷாட் -'ம்' என்று தலையாட்டுகிறாள் அபிதா
குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா
சேது : வந்ததும் சீனியருக்குக் குட்மார்னிங் சொல்லிட்டுப் போகணும்னு தெரியாதா...?
குளோஸ் ஷாட் - அபிதா : குட் மார்னிங்
குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா
சேது: நல்லா, வெறப்பா போலீஸ்காரன் மாதிரி நின்னு சொல்லு.
குளோஸ் ஷாட் - அபிதா : குட்மார்னிங். சல்யூட் அடித்தபடி சொல்கிறாள்.
மிட் ஷாட் - சேது : டெய்லி இது மாதிரி வந்து சொல்லிட்டுப் போகணும். புரியுதா?
என்ற சேது, அபிதாவின் கையிலிருக்கும் நோட்டு, டிபன் பாக்ஸைப் பார்க்கிறான்.
சேது : அதைக் கொடு...
அபிதா நோட்டுப் புத்தகத்தைக் கொடுக்கிறாள். அதை விரித்துப் பார்க்கிறான் சேது. குளோஸ் ஷாட் - புத்தகத்தில் மயில் இறகு இருக்கிறது.
குளோஸ் ஷாட் - சேது : என்னது...?
குளோஸ் ஷாட் -அபிதா : மயில் இறகு
குளோஸ் ஷாட் - சேது : அது தெரியுது... அதை ஏன் இதிலே வச்சிருக்கே?
குளோஸ் ஷாட் - அபிதா : இல்ல... குட்டி போடும். அதான்....
குளோஸ் ஷாட் - சேதுவின் முகத்தில் புன்னகை அரும்புகிறது. குளோஸ் ஷாட் - அபிதா. குளோஸ் ஷாட் - நண்பன். குளோஸ் ஷாட் - நோட்டுப் புத்கத்திலிருந்து ஒரு இலையை எடுத்துக் காட்டி அபிதாவிடம் கேட்கிறான்.
சேது : அப்ப இது? முட்டை போடுமா?
குளோஸ் ஷாட் - அபிதா : ம்... ம்... இது படிப்பு இலை. இதை புக்ஸ்லே வச்சா நன்னா படிப்பு வரும்.
குளோஸ் ஷாட் - சேது. குளோஸ் ஷாட் - அபிதா
மிட் ஷாட் - சேது : அதைக் கொடு
புத்தகத்தை மூடி வைத்த சேது, அபிதாவின் டிபன் பாக்ஸை வாங்குகிறான். டைட் குளோஸ் ஷாட் -இருவரது கைகளும் ஏதேச்சையாக ஸ்பரிசிக்கின்றன. மிட் ஷாட் - சேது டிபன் பாக்ஸைத் திறக்கிறான். அபிதா பயந்து போய் நிற்கிறாள்.
சேது : தயிர் சோறு, மாவடு...! முட்டை, மீன் எதுவுமில்ல?
நண்பன் : பார்த்தாத் தெரியல? மாமி!
சேது : ஓ... மாமியா...?
குளோஸ் ஷாட் - அபிதா. மிட் ஷாட் - சேது சாப்பிடுகிறான். நண்பன் சாப்பாடு கேட்டு கை நீட்டுகிறான்.
நண்பன் : எனக்கு
அவனுக்கு ஒரு கவளம் சாதம் கொடுக்கிறான் சேது.
குளோஸ் ஷாட் - அபிதா. மிட் ஷாட் -சேது சாப்பிடுகிறான். மறுபடி நண்பன் கை நீட்ட, சலிப்புடன் டிபன் பாக்ஸையே அவனிடம் கொடுத்துவிடுகிறான் சேது. கை துடைக்க அபிதாவின் நோட்டுப் புத்தகத்திலிருந்து
'சரக்'கென்று பேப்பரைக் கிழிக்கிறான். பதறிப் போகும் அபிதா, தன் தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டுகிறாள். குளோஸ் ஷாட் - சஜஷன் - அபிதா.
சேது: பாப்பா பேரென்ன...?
குளோஸ் ஷாட் - அபிதா : அபிதகுஜலாம்பாள்...
குளோஸ் ஷாட் - சேது : ம்...?
குளோஸ் ஷாட் - அபிதா : அபிதகுஜலாம்பாள்.
குளோஸ் ஷாட் - சேது : அப்படீன்னா...?
குளோஸ் ஷாட் - அபிதா : அப்படின்னா... பேரு!
குளோஸ் ஷாட் - சேது : அது தெரியுது... அதுக்கு என்ன அர்த்தம்?
குளோஸ் ஷாட் - அபிதா : அர்த்தம்... தெரியாது...
குளோஸ் ஷாட் - சேது : எவன் உனக்கு இந்தப் பேர் வச்சான்...?
குளோஸ் ஷாட் - அபிதா : எங்கம்மா...
குளோஸ் ஷாட் - சேது : சரி நாளைக்கு வரும்போது உங்கம்மாகிட்டே இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு கேட்டு வந்து சொல்லு...
குளோஸ் ஷாட் - அபிதா : அம்மா இறந்துட்டாங்க.
குளோஸ் ஷாட் - சேது : ஓ... மா மர்கயாவா...
உங்கப்பனாவது இருக்கானா? இல்லே அவனும் போய்ச் சேர்ந்துட்டானா...?
குளோஸ் ஷாட் - அபிதா : இருக்கார்...
குளோஸ் ஷாட் - சேது : அப்ப அவன்கிட்டே கேட்டு வந்து சொல்லு...
குளோஸ் ஷாட் - 'ம்...' என்று தலையாட்டுகிறாள் அபிதா.
குளோஸ் ஷாட் - சேது : போ...
மிட் ஷாட் - சேதுவின் நண்பன் நோட்டையும் டிபன் பாக்ஸையும் அபிதாவிடம் கொடுக்க அவள் போக முயலுகிறாள்.
நண்பன் : எக்ஸ்க்யூஸ் மீ...
சேதுவின் நண்பன் கூப்பிட நிற்கிறாள் அபிதா.
அபிதா : ம்...?
நண்பன் : உங்க மயில் இறகு குட்டி போட்டா நேக்கும் ஒண்ணு தர்றேளா...?
நானும் வளர்த்துக்கறேன்...
பெண்ணைப் போன்ற பாவனையுடன் கேட்கிறான் நண்பன்.
அபிதா : ம்...
நண்பன் : ரொம்ப டேங்க்ஸ்...
அபிதா போனதும் நண்பனை செல்லமாக அடிக்கிறான் சேது.
சேது: போடா... இப்படிப் பேசிப் பேசி ஒரு நாள் அஜக்காகவே மாறப் போறே...
அனைவரும் சிரிக்கின்றனர். சேது கீழே பார்க்கிறான்.
குளோஸ் ஷாட் - அபிதாவின் நோட்டிலிருந்த மயில் இறகு கீழே கிடக்கிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், நண்பன், சேதுவின், அபிதாவின், சொல்லு, நோட்டுப், கேட்டு, சிகரெட், காட்டி, பார்க்கிறான்