முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
»
காட்சி 39 - பகல் EXT . / பங்களாவுக்கு வெளியே
சேது - காட்சி 39 - பகல் EXT . / பங்களாவுக்கு வெளியே
மிட் ஷாட் - வெளியே வந்து ஆனந்தக் கூத்தாடுகிறான் சேது.
நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு உருகி உருகி கெடந்த மனசு பறந்து போகுதே
... பாடல் காட்சி தொடர்கிறது.
மிட் ஷாட், குளோஸ் ஷாட், மிட் ஷாட் \ டாப் ஆங்கிள் - பின்னணியில் பாடல் ஒலிக்க, பைக்கில் கால் நீட்டிப் படுத்திருக்கிறான். குளோஸ் ஷாட் - சேதுவை ஒருவன் அடிக்கிறான். எட்டு பேர் சேதுவை மாற்றி மாற்றி அடிக்க
ஆண் குரல் (Overlap) : பெரிய ஹீரோவாடா நீ... ஏதோ எங்க வயித்துக்கு பொம்பளைங்களை கூட்டிவிட்டு பொழப்பு நடத்துறோம். இதுல உனக்கு என்னடா?
லாங் ஷாட் - சேதுவை பலமாக அடித்து அவனை மலையடிவாரத்தில் உருட்டி விடுகின்றனர். லாங் ஷாட் - சேது அவர்களைத் திருப்பித் தாக்குகிறான். லாங் ஷாட் \ டாப் ஆங்கிள், மிட் ஷாட் - சுற்றி நின்று சேதுவை சரமாரியாக அடிக்கின்றனர். குளோஸ் ஷாட் - சேது மயக்கமாகிறான். மிட் ஷாட் - மயங்கிய சேதுவை ஒருவன் அடித்து கீழே தள்ளுகிறான். குளோஸ் ஷாட் - மயக்கமாகிக் கிடக்கும் சேதுவை ஒருவனின் கால் புரட்டிப் போடுகிறது. மிட் ஷாட் - ஒருவன் பார்கிறான். மிட் ஷாட் - பாறை. மிட் ஷாட் - மயங்கிக் கிடக்கும் சேதுவைத் தூக்கிச் சென்று பாறையில் மோதுகிறார்கள். பாறையில் சேதுவின் தலை மோதி ரத்தம் தெறிக்கிறது. மிட் ஷாட் - மீண்டும் மோதுகிறார்கள்.
குளோஸ் ஷாட் - சேதுவைத் தூக்கி வீசுகிறார்கள். மிட் ஷாட் - சேது பெரும் குரலில் அலறுகிறான்.
லாங் ஷாட் - சுயநினைவற்ற நிலையில் ஒரு பாறையில் தொங்குகிறான் சேது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - சேதுவை, குளோஸ், பாறையில், ஒருவன்